பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தம்பிரான் தோழர் கரையும் கடலும் மலையும் காலையும் மாலையும் எல்லாம் உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திர லோகன் வரையின் மடமகள் கேள்வன் வானவர் தானவர்க் கெல்லாம் அரையன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோகேளிர் (7.73:1) என்ற திருப்பாடலை மூதற்பாடலாகக் கொண்ட சந்த இசைப் பதிகத்தைப் (7.73) பாடிக்கொண்டே திருக்கோயில் வாயிலை அணுகுகின்றார். முதலில் சிவனடியார் வீற்றிருக் கும் சிறப்புடைய திருவாசிரிய மண்டபத்தைக் கை கூப்பித் தொழுகின்றார். புற்றிடங் கொண்ட எம் பெருமான் எழுந் தருளியிருக்கும் திருமூலட்டானத்தைச் சூழ்ந்த திருமாளிகை வாயிலை இறைஞ்சி உள் புகுகின்றார். திருமகளார், மலர் துவி வழிபடச் செய்யத் திருவருள் புரிந்த பூங்கோயில் அமர்ந்த பெருமான் திருவடிகளை உளங்குளிர இறைஞ்சு கின்றார். அந்த இன்ப வெள்ளத்தில் மூழ்கி நின்று இன்னிசைத் தமிழ் மாலையினைப் பாடிப் பரவுகின்றார்" அப்பொழுது அனைவரும் கேட்கும்படி, "நம்பியா குரனே தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்: நீ 9. ஏழுதிருமுறைகளிலும் மிகுதியான பாடல்கள் இத் தலத்திற்கே உண்டு (ஆரூர், சச்சி ஏகம்பம், மறைக் காடு ஆகிய மூன்று தலங்கட்கே ஏழு திருமுறை களிலும் பதிகங்கள் உண்டு, சீகாழிக்கு மிகுதியான பதிக எண்ணிக்கை 71 இருப்பினும், ஆறாம் திரு முறையுள் ஒருதிருப்பாடல் கூட.சீகாழிக்கு இல்லை), சம்பந்தர்-ல், அப்பர்-21. சுந்தரர்-8 என்று 35 பதி கங்களைப் பெற்றுள்ளது இத்திருத்தலம். சுந்தரர்: Ira 7.8; 7.37; 7,39; 7,51; 759; 7.73; 7.83;