பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(1) 5? எம்மால் தடுத்தாட் கொள்ளப்பெற்ற அன்று நீ பூண்டிருந்த திருமணக் கோலத்தையே எப்பொழுதும் மேற்கொண்டு இந் நிலவுலகில் இன்புற்று வாழ்வாயாக’’ என்றதோர் அருள். வாக்கு வானிடையே எழுந்தது.' இந்த அருள் மொழியைக் கேட்ட ஆரூரர், "அடியேனைத் தடுத்தாட்கொள்ள வந்த மறையவனே, ஆரூர் அமர்ந்த அருமணியே, நாயினும் கடை யேனாகிய எளியேனுக்கும் நின் திருவடித் தாமரையைத் தந்தருளியது நின் பெருங் கருனைத் திறமன்றோ?' என்று கூறிப் புற்றிடங்கொண்ட பெருமானைப் பல முறை வணங்கிப் போற்றுகின்றார். வீதிவிடங்கப் பெருமானாகிய தியாகேசரையும் தொழுது திருமாளிகையை வலம் வருகின் நார் அன்று முதல் அடியார்கள் யாவரும் ஆரூரரைத் 'தம்பிரான் தோழர்' என்று அன்பினால் வழங்கிப் போற்று வாராயினர். நம்பியாரூரரும் இறைவன் பணித்த வண்ணம் திருமணக்கோலத்தையே தவக் கோலமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றார். இரண்டாம் நிலை. பரவையாருடன் இல்வாழ்க்கை நடத்தும்போது குண்டையூரில் பெற்ற நெல்லைத் திருவா ரூரில் சேர்ப்பதற்கு' "நீள நினைந்து" (7.2.0) என்ற பதிகம் கோளிலியில் திருக்கோயில் கொண்டுள்ள சிவபெருமான்மீது பாடியதும், கோட்புலி நாயனாரால் உபசரிக்கப் பெற்ற போது நாட்டியத்தான் குடி சென்று 'பூனாணேசர் அசவம்' (7.15) என்ற திருப்பதிகம் பாடியதும், வலிவலம் சென்று "ஊனங்கத் துயிர் (7 67) என்ற பதிகத்தால் வழிபட்டதும்: பரவையாருக்காகப் பங்குனி உத்திரத் திருவிழாச் செலவுக்குத் 10. பெ.பு: தடுத்தாட் கொண்ட - 127. 11. கோளிலி: 5-வது கட்டுரை 6-வது அடிக்குறிப்பு காண்க, -