பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - . தம்பிரான் தோழர்" திருப்புகலூர்ப்"பயணம் சென்று பொன்பெற்று: தம்மையே புகழ்ந்து" (7.34) என்ற திருப்பதிகம் பாடிப் போற்றியதும், திருப்பனையூர்ப் பெருமானை வழிபட்டதும் முன்னர்க் காட்டப் பெற்றன (5-ஆவது கட்டுரை). மூன்றாம் நிலை. மேலும், ஒரு நாள் இறைவன் எழுந் தருளிய திருத்தலங்களைச் சேவிக்க வேண்டும் என்ற எண்ணம் , நம்பியாரூரரின் மனத்தில் உதிக்கின்றது. திருவாரூரினின்றும் புறப்பட்டு முன்னிலம் வருகின்றார். நன்னிலம் பெரிய கோயில்' சந்நிதியை அடைந்து 'தண்ணிழல் வெம்மை யினால் (7.98) என்ற முதற் குறிப்பினையுடைய திருப் பதிகம்பாடி இறைவனைப் போற்றுகின்றார். தண்ணியல் வெம்மையினான் தயிர்க்கடை தோறும்பலி பண்ணியல் மென்மொழியார் இடங்கொண்டுழல் பண்டரங்கன் புண்ணிய நான் மறையோர் முறையாலடி போற்றிசைப்ப நண்ணிய நன்னிலத்துப் Y. பெருங்கோயில் நயந்தவனே.(1) 12. புகலூர் (திருப்புகலூர்): மயிலாடுதுறை. காரைக்குடி இருப்பூர்திப் பாதையில் நன்னிலம் நிலைய்த் திலிருந்து 4 கல்தொலைவு, பேருந்து வசதி உண்டு. அப்பர் பெருமான் முத்தி பெற்ற தலம். இறைவன் சிறிது சாய்ந்திருப்பதால் கோணப்பிரான் (அப்பர் 4; 104; 10 என்று பாடுவர் அப்பர் பெருமான் (இது வீரட்டம்). அப்பருக்குச் சித்திரை சதயத்தில் 10 நாள் விழா இங்கு நடைபெறுகின்றது. - 13. நன்னிலத்துப் பெருங்கோயில் நன்னிலத்திலிருந்து 3 கல்தொலைவிலுள்ளது. கோச் செங்கட் சோழன் எடுப்பித்த கட்டுமலைக் கோயில் (7,98:11),