உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்ம பதம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ஆயினும் இவைகளைப் போன்ற பௌத்த நூல்கள் நூற்றுக்கணக்காகத் தமிழில் இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.

(தம்மபதம் பெளத்தத் திருமுறைகளின் ஒரு பகுதி.) எங்கும் புகழ் பெற்ற இத்தம்மபதத்திற்கு எத்தனையோ மொழி பெயர்ப்புக்கள் இருந்திருக்கலாம். உரை வடிவாக மட்டுமின்றிப் பாடல்களாகவும் அது தமிழில் வழங்கிவந்திருக்க வேண்டும். ஆனால் மருந்துக்கு ஓர் ஏட்டுப் பிரதிகூட இல்லாமல் அவைகளும் மற்றைப் பௌத்த நூல்களோடு மறைந்தொழிந்து விட்டன. தம்மபதத்திற்குத் தமிழில் புது மொழி பெயர்ப்புக்கள் செய்யும்படி ஏற்பட்டுவிட்டது!

ப. ராமஸ்வாமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/14&oldid=1357362" இலிருந்து மீள்விக்கப்பட்டது