பக்கம்:தம்ம பதம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இயல் காட்டு

ஆயிரம்

(இந்த இயலிலுள்ள சூத்திரங்களில் ஆயிரம் என்ற

சொல் பலமுறை வருவதால் இயலின் பெயரே ஆயிரம்'

என்

றாயிற்று)

100. அர்த்தமற்ற பதங்களைத் தொகுத்த நூறு பாடல்

{ 01.

|():}.

! 04.

கள் ஒப்பிப்பதைப் பார்க்கினும், பொருளுள்ள ஒரே பாசுரம் மேலானது; அதைக் கேட்டதும் ஒருவன் உபசாந்தி' அடைகிறான். (1)

ஒருவன் ஆயிரம் பேர் கொண்ட ஆயிரம் படை களை வெற்றிகொள்கிறான்; மற்றொருவன் தன் னைத்தானே அடக்கி வெல்கிறான்; இவர்களுள் தன்னை வென்றவனே வெற்றி வீரருள் முதன்மை யான வன். (2)

2. மற்றவர்களை வெல்வதைப் பார்க்கினும், ஒருவன் தன்னைப் பண்படுத்திக் கொண்டு, எப்போதும் புல

னடக்கத்தைப் பயிற்சி செய்து, தன்னைத்தானே வெல்வது மேலானது. (3)

அத்தகைய ஒருவனுடைய வெற்றியைத் தேவரோ, கந்தர் வரோ, பிரம்மாவின் துணை பெற்ற மாரனோ

தோல்வியாக்க முடியாது. (4)

மாதந்தோறும் ஆயிரம் யாகங்களாக நூறு வருடம் யாகம் செய்பவன் தம்மைத் தாமே அடக்கிக் கொண்ட ஒருவரை ஒரு கணம் வணங்குதல் அந்த நூறு வருட வேள்வியைவிட மேலானது. (5)

1. உபசாந்தி-இன் பத்திலும் துன்பத்திலும் சலிப்

படையாத நிலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/34&oldid=568647" இருந்து மீள்விக்கப்பட்டது