நரகம் ☐ 73
309. தர்ப்பைப் புல்லைத் தவறாக இழுத்தால் அது கையை அறுத்து விடுகிறது; அதுபோல் தீய வழியில் பயிலும் துறவறமும் ஒருவனை நரகில் சேர்க்கிறது. (6)
310. சிரத்தையின்றிச் செய்யும் காரியமும், ஒழுங்காகக் கடைப்பிடியாத விரதமும், மனமாரப் பேணாத பிரம்மசரியமும் பெரும் பயனை அளிக்கமாட்டா. (7)
311. ஒருவன் யாதேனும் ஒன்றைச் செய்ய வேண்டுமாயின் அதை ஊக்கத்தோடும் உறுதியோடும் செய்வானாக; கவனக்குறைவான துறவி தானே தன் மீது அதிகப் புழுதியையே பூசிக்கொள்கிறான். (8)
312. தீய வினையைச் செய்யாது விடுதலே நலம். ஏனெனில் தீவினை பின்னால் துன்பத்தை அளிக்கின்றது. நல்வினை புரிவதே நலமாகும்; அதனால் பின்னால் வருந்த நேராது. (9)
313. (இராஜ்யத்தின்) எல்லைப் புறத்தில் இருக்கும் நகரத்தை உள்ளும் வெளியும் அரண் செய்து காப்பது போல், ஒருவன் தன்னைக் காத்துக் கொள்க. கண நேரத்தையும் வீணாக்கவேண்டாம்; ஒவ்வொரு நிமிஷத்தையும் நல்வழியிலே பயன் படுத்தாமல் நிமிஷங்களை வீணாகக் கழித்தவர்கள் நிரயத்தில் விழும்போது வருந்துவர். (10)
314. நாண வேண்டாதகருமங்களுக்கு நாணியும், நாண வேண்டியவைகளுக்கு நாணாமலும் இருக்கும். மனிதர் தவறான கொள்கைகளைப் பின்பற்றித் தீயகதியை அடைகின்றனர். (11)