பக்கம்:தயா.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{32 suurr அவள் பதில் பேசவில்லை. மோதிரத்தை நீக்கி, அவன் கையில் வைத்தாள், ஆச்சரியத்துடன் உற்று நோக்கிளான். ஆனால், அங்கு எவ்விதமான மாறுதலுமில்லை. “சரி வா எழுந்திரு,” “இங்கே நில்லு, நான் உள்ளே போய் வரவரை இங்கேயே காத்திருக்கணும் தெரிஞ்சுதா?” தலையை ஆட்டினாள். நாலு அடி நடந்து திரும்பி வந்தான். 'உனக்கு ஒண்னும் கஷ்டமில்லையே?’’ புருவங்கள் வினாவில் நெறிகையில், நெற்றிச் சுருக்கத்தில் திலகம் குழைந்தது. "இந்த மாதிரி உன் பொருளை எடுத்துக்கிட்டுப் போறேனேன்னு! உதட்டோரம் குழிந்த புன்னகை அவன் அறியா மைக்கு இரங்குவது போன்றிருந்தது. ஏன் பேசாமடந்தை ஆயிட்டா? ஆனால் நமக் கென்ன, ஆனால், உள்ளே நுழையுமுன் வாசற்படியில் நின்று ஒரு முறை திரும்பிப் பார்த்தான். கைகளைக் கோர்த்த வண்ணம் அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள். பாவாடை மேல் நீலத் தாவணி அடியில் பச்சைப் பட்டு ரவிக்கையின் முடிச்சு தெரிந்தது? நிஜமாகவே ராஜகுமாரிதானா? “என்ன முதலாளி வா, வா. ஏன் வாசல்படியில் நிக்கறே?’’ தன்னை மூடும் மயக்கத்தைக் கலைக்கத் தலையை உதறிக்கொண்டு உள்ளே வந்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/108&oldid=886220" இலிருந்து மீள்விக்கப்பட்டது