பக்கம்:தயா.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணி ! {3 ரயில்வே கிராதியருகே இருவரும் நிக்கறோம், எதிரே ஜலம் விரியுது. இப்போ என் நெஞ்சு நிறைஞ்ச நிலையில் என் நெஞ்சைப் பிழிஞ்சு ஊத்தினால், இவ்வளவு பெரிசுதானிருக்கும், இங்கேயும் மனிதன் மனசு போலவே, விளிம்பு இங்கே கொஞ்சம் தெரியுது. அதோ கொஞ்சம் தென்படுது. நடுவிலே, பாதிக்கு மேலே இருள் தேங்கி நிக்குது. எதிர்க்கரையில் பாலம் மேட்டில் ஏறி மறுபடியும் வளைவா கீழே இறங்குது, காரும் வண்டியும் வண்டாப் பாலத்துக்குமேலே பறக்குது. ஊருது, பாலத்து மேலே சாrதிக் கம்பங்களா நிக்கற எலெக்ட்ரிக் லைட்டுகளிலிருந்து ஒளி கீழே ஜலத்தில் பட்டுச் சிதறி ஒளித் தூண்களா நீண்டு உள்ளே வானத்து நிழலைத் தூண் துரணா தாங்குது, "ராஜகுமாரி, அதோ பார், உன் அரண்மனை!” அவகிட்டேருந்து வந்த பெருமூச்சு, ஒஸ்தி ஸல்லாத் துணியா என்மேல் படர்ந்து, பெருகி, வழிஞ்சு, அலைமோதி என்னைச் சுத்திச் சூழ்ந்துட்டுது, இது அசதியா, அவள் நெஞ்சின் நிறைவா, ஏதேனும் பழைய நினைப்பா, இன்பத்தின் எல்லையா? இன்பத்தின் எல்லையே தொடுவானத்தின் துயரம் தானா? ‘ராஜகுமாரி!” முகம் மெதுவா என் பக்கம் திரும்புது, ராஜகுமாரி! நீ நிஜமாவே ராஜகுமாரிதான், என் வரையில் எனக்குச் சந்தேகமில்லை. அவனவனுக்கு அவ னவன் மனமார்ந்த நினைப்புதான் சத்தியமானால், என் கற்ப னையின் சத்தியத்தில் நீ ராஜகுமாரிதான்-ராஜகுமாரி கூட இல்லை. ராணி!" து-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/119&oldid=886232" இலிருந்து மீள்விக்கப்பட்டது