பக்கம்:தயா.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜிங்லி i25 வழியிலே கண்ணாடியிலே கழுத்தை நீட்டிய வண்ணந்தான். உதட்டை முறுக்கிண்டு, புருவத்தை நகத்தால் கிறிண்டு, நெற்றியில் தொங்கும் மயிர்ப் பிரியை வளையமாய்த் திருகி விட்டுண்டு-அது என்னென்ன கோணங்கியோ! அப்பாவுக்கு photo ஷோக். யார் எங்கே எடுக்கப் போறான் னு எப்படி மோப்பம் தெரியுமோ! அது தெரிஞ் சவாளோ தெரியாதவாளோ-அவாளுக்கு சம்மதமோ இல்லையோ-no mind ஓரத்திலாவது டக்குனு தலையை நீட்டிடுவார். பாட்டிக்கு கற்சட்டி ஷோக். அடுக்காய் ஒண்ணுக் குள்ளே ஒண்ணு-இது வெத்தல் குழம்புக் கச்சட்டி, இது ரஸ்க் கச்சட்டி, இது தோசைமாவு கரைக்கிற கச்சட்டி இது கறி வதக்கற கச்சட்டி, இது வடுமாங்காய் ஊறுகாய்க் கச்சட்டி.. அதுமாதிரி கடம்பாடிக்கும் 'பூனைக்குட்டி' ஷோக். ரெண்டு மூணு தன் மேல் ஏறி விளையாட விட்டுக் கொள்வான். ஒண்ணு அவன் கழுத்து வளைவில் அடிவயத்தை 'ஈஷி”ண்டு உறங்க, ஒண்னு அவன் உச்சந் தலை மேல் வாலை முறுக்கிண்டு நிற்கும். ஒண்ணு மடியில் விளையாடும், பக்கத்தில் தாய்ப்பூனை-நான் கிட்ட வந்தாலே சீர்றதே-கண்ணை மூடி, சுகமாய் வெயில் காப்ஞ்சுண்டிருக்கும். - கடம்பாடிக்கு எங்கிருந்துதான் செத்தபூனை கிடைக் குமோ உடனே அவன்பாடு கொண்டாட்டத்தான். சவ ஊர்வலத்திற்கு தடபுடல் ஏற்பாடென்ன, சவந்துக்க சம் வயதில் அவன் சேர்க்கும் "ஜமா' என்ன, பாடைய லங்காரத்திற்குப் பொன்னரளிப் பூவென்ன, கொட்டு முழக்குக்கு ஒட்டை டப்பாக்களென்ன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/131&oldid=886247" இலிருந்து மீள்விக்கப்பட்டது