பக்கம்:தயா.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 2 గ్రీ தயா சவத்தின் கீழ்வாய்ப்பல்லின் இளிப்பைக் காட்டி : :பாருடா ஜிங்லி, அதன் சிரிப்பைப் பார்த்தியாடா? எல்லாருக்கும் நடக்கிற மாதிரி நமக்கும் நடக்குதுன்னு அதுக்கு சந்தோஸண்டா! நம்மை வாழ்த்துதுடா!' அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு ஜிங்லி தலையைக் ஆட்டுவான். இல்லாட்டா அவனுக்குப் பிடித்தமான விளையாட்டு எவ்வளவோ இருக்கே, அதில் எல்லாம் சேர்த்துக்க மாட்டான், "இப்படி எனக்குக் குமட்டறதே. இந்த நாத்தம் இவன் மூக்கை மாத்திரம் துளைக்காதா?” இன்னொரு ஆச்சரியம் என்ன தெரியுமா? கடம்பாடி யைத் தேள் கொட்டாதே ஒருதரம் உப்புச் சட்டியில் கை விட்டதும் அம்மாவை ஒரு போடு போட்டுட்டு-அம்மாவுக்கு வாந்தி வாந்தியா எடுக்கறதும், மயக்கம் போடறதும் மாரடைக்கறதும்..அடேயப்பா ஒரே அமர்க்களப்படுத் திட்டா. பாட்டி, புளியைக் கரைச்சுண்டே ('புளி கரைக்க ஒரு கச்சட்டி”, “ஏற்கெனவே சொல்ல வேண்டாம், இக்கிவி பிக்கிலி வோறாத்துக்குக் கர்ப்பிணி வேறே: அம்மாவுக்கு வலியைவிட ஆத்திரம். தேள் கண்ணுக்குப் படாமலே மின்னலாய் மறைஞ்சுடுத்து. கொட்டின தேளை அடிச்சாலே பாதி விஷம் இறங்கும் என்கிற ஆறுதலுக்கு வழி யில்லாமலே போச்சு, . ஆனால் கடம்பாடி தேளைப் பிடித்துப் புறங்கையில் விட்டுக் கொள்வான். அது வாலைத் தூக்கிக் கொண்டு அவ்ன் தோள் வரை ஏறும், ஆனால் ஒன்றும் செய்யாது. அது அப்படி ஊர்கையில், அதன் செயலுடன் சோபையையும் இழந்து விட்டது போல் தோன்றும். படிப் படியாய் ஒய்ச்சல் கண்டு ஒட்டமும் தளர்ந்து, முழங்கை முட்டில் இகைத்து நின்று விடும். அதன் பலத்தையும் வாங்கிக்கற அளவிற்கு கடம்பாடி ரத்தத்தில் எந்த விஷம் ஒ.றது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/132&oldid=886248" இலிருந்து மீள்விக்கப்பட்டது