பக்கம்:தயா.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 高級ffr கொடுக்கவதும், வந்தவா தாண்டிப்போனவுடன், நானறுந்த வில்மாதிரி ("ட்ரொய்ஞ்ஞ்') நிமிர்ந்துக்கறதும் அடேயப்பா! மாமிகள் எல்லாரும் பேசிக்கறா: மாப்பிள்ளை முடுக் குத்தான்!” ஆனால் ஒண்னுதான் முழுக்கப் புரியல்லே முழுக்கப் பிடிககல்லே-ஒரேடியா இங்கிலீஷில் பொரிஞ்சு தள்ளறார். “ zu Who is the young gentleman?” அட. ஒரு செக்கண்டில், என் குட்டைக்குச் சரியா மாப் பிள்ளை தன் நெட்டையை வளச்சிட்டாரே!- அவனுடைய கைக்குள் அவனுடைய பொம்மைக் கை மறைஞ்சு போக்க “He is my little brother” (வெட்கம் கெட்டவர் தாவி கட்றதுக்கு முன்னாலேயே ரெண்டுபேரும் பேசிக்க ஆரம்பிச்சுண்டாச்சு!) "How do you do. young man? Charming littie fellow! and this—? (ட்ரொய்ஞ்ஞ! ) அத்திம்பேர் நிமிர்ந்தாச்சு, அத்திம்பேர் புருவம் ஒரு துள்ளு துள்ளித்து, தலைமயிரையே தொட்டுடும் போல. (முடியுமோ?) "இவர் பேர் துர்காந்த், அத்திம்பேர் கணக்கு வாத்தியார்.” - “Oh, very glad to meet you.” இவர் பெயர் ரீகாந்த். இவர் ஏ. எஸ். எம். முக்கு மச்சினன். இவர் அவாத்துக்கு வந்து நாலு மாசமாச்சு. இவர் எப்போ திரும்பிப் போவார்னு அவாளுக்கே தெரியாது. இவருக்கு அதைப்பற்றி அக்கறை கிடையாது. சாப்பாடு அவாத்துலே எனக்குக் கணக்குக் கத்துக்கொடுக்கிற சாக்கிலே மத்தியான டிபன் எங்காத்துவே, இன்னிக்கு ஒண்னும் பண்ண லேன்னு குழம்பு சாதத்தை உருட்டி வெச்சா, அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/152&oldid=886270" இலிருந்து மீள்விக்கப்பட்டது