பக்கம்:தயா.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 #tuזr பாய்ந்தது. உச்சி மண்டையுள் நரம்புகள் தீய்ந்து கருகும் நெடியில் மூக்கு நுனி துடித்தது. அந்த அருவருப்பைக் காட்டி லும் பயங்கரம் ஒன்று நினைவில் புரண்டது. குழந்தை! ஒரு காகிதத்தைத் தேடி அலமாரியில் அவர் சாமான் களுடன் அடுக்கியிருக்கும் பேனாக் கத்தியால் நெம்பிப் பெயர்த்து. காகிதத்துள் தள்ளினாள். மண் இலேசில் கழல வில்லை. கெட்டித்துப்போயிருந்தது அடையாளம் அழியும் வரை சுவரை நன்றாய்க் கீறிச் சுரண்டித் துளையும் காகிதப் தில் சேர்த்தாள். ஜன்னலுக்கு வெளியே கொட்டுகையில் ஜன்னல் சிம்பியில் கையிடித்து கூட்டின் சீள்கள் கீழே சிதறின. அவைகளினூடே ஒரு பச்சைப் புழு நெளிந்தது. வயிற்றைக் குமட்டியது. "என்ன பண்ணறே?" துரக்கிப் போட்டது. திருட்டில் கையும் களவுமாய் அகப்பட்டுக் கொண்டாற்போல் திருதிருவென விழித்தாள். ஒரு வேளை அலமாரிச் சாமான்களையெல்லாம் நான் இன்னும் தொடக் கூடாதோ? "ஒண்னுமில்லேம்மா. அலமாரியில் செல்லு கட்டி யிருந்தது. அதை...” "செல்லா? குளவிக் கூடுன்னா அது? அட ராமா, என்ன பண்ணினே? அழிச்சூட்டியா?” "ஆமாம்!” அழித்தால் என்ன? இந்த வீட்டில் தொட்டதற்கெல்லாம் சாட்சிக் கூண்டுதானா? கன்னங்கள் குறுகுறுத்தன. "ஆமாவா? யாராவது குளவிக் கூட்டைப் போய் அழிப்பாளா? வீட்டில் குளவி கூடு கட்டினால் ஆட்டுக்கே நல்லதுன்னு உனக்கு யாரும் சொல்லித் தந்ததில்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/188&oldid=886310" இலிருந்து மீள்விக்கப்பட்டது