பக்கம்:தயா.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 183 கிராமத்திலிருந்துதானே வந்திருக்கே? பேரன் பிறந்தான் கூடவே குளவியும் கட்டியிருக்குன்னு மகிழ்த்திண்டிருந்தேன். நீ வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் உன் சுத்தத்தைக் கொண்டாட ஆரம்பிச்சுட்டாயாக்கும்- துடைச்சுப் பெருக்கற சுத்தத்தை' "சுத்தத்துக்கில்லேம்மா. குழந்தையைக் கொட்டிவிட்டால் என்ன கெய்கிறது?" “ஏண்டி பெண்னே! நீ கிராமத்திலிருந்துதானே வந்திருக்கே? உன் ஊரிலே மனிதர்கள் வீட்டில் வாழும் பாம்போடு குடித்தனம் பண்ணல்லியா? அது உன்னை என்ன பண்ணித்து? நாமே நல்லதுக்குப் பிறந்தவாயில்லே, இந்தக் கண் இன்னும் என்னென்ன அக்கிரமங்களைக் கான இருக்கோ இந்தக் கட்டை, பூச்சி பொட்டிலிருந்து யார் யார் சாபத்தை வாங்கிக் கட்டிக்கணும்னு இருக்கோ-’ பயம் வயிற்றுக்குள் பனிக்கட்டிபோல் திரியாயிறங்கிற்று. துரங்கிக்கொண்டிருந்த குழந்தையை வாரி யிறுகக் கட்டிக் கொண்டாள். அதன் அழுகுரல் அவளுக்குத் தேவையாக இருந்தது. அதன் வருகையை வெகு துரத்திலேயே அறிந்து கொண்டாள், அதன் வருகைக்கு, தீர்ப்பின் விதிப்புக்குக் காத்திருக்கும் கைதி போல் காத்திருந்தாள். கதவுகளைத் திறந்து வைத்தால் கூடம், ಟ್ರ+ விட்டால் அறை. அதிலும் மர"ஸ்கிரீன் நிறுத்திப் பாதி யிடம் தடுத்த ஒதுக்கம், குறிப்பிட்ட வேளைகளில் குறிப் பிட்ட உணவு, குடிஜலம்கூட அளந்துதான். தடுத்த இடம் தாண்டி நகர முடியாது. அவள் சிறை தான் இருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/189&oldid=886311" இலிருந்து மீள்விக்கப்பட்டது