பக்கம்:தயா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாய மான் §§ வந்தாச்சு. சரி நான் போறேன். அம்மா இப்பவே பல்லை நற நறன்னு கடிச்சுண்டிருப்பா-' மண்டி, சிதறிக்கிடக்கும் சோபாக்கள், நாற்காலிகள், திண்டுகள் மத்தியில் திகைத்து நிற்கிறேன். தரை தெரிய வில்லை. காலடியில் விரிப்பு மெத்தென அழுந்துகிறது. சுவரையடைத்த அலமாரிகளில் புத்தகங்கள் வழிகின்றன. அறையல்ல. இது ஒரு தனி உலகம். "எப்படி?" என் பின்னால் அப்பாவின் குரல் பூம்: இடுகின்றது. திடுக்கிட்டுத் திரும்புகிறேன். “How do you like it? Good show, isnt it?” அப்பா கையை வீசுகிறார். இன்னும் அந்தப் பச்சைக்கல் மோதிரத்தை அணிந்து கொண்டு தான் இருக்கிறாரா என்ன? அம்மா எப்பவோ வாங்கினாளாம். அப்பாவுக்கு என்று. நாளடைவில் அது மோதிர விரலிலிருந்து சுண்டு விரலுக்கு மாறிவிட்டது. தழையத் தழைய வெள்ளை ஜிப்பாவும், பாதம் தெரியாது தரைபுரள-அப்படியும் கரையில் ஒரு இம்மி அழுக்கு படாது-மல் வேட்டியும் அப்பாவின் வாட்ட சாட்டத்தை எடுத்துக் காட்டுகின்றன. அப்பாவுக்கு இன்னும் ஒரு மயிர் நரைக்கவில்லை. ஒரு மயிர் உதிரவில்லை, “You know, சிலர்போல், இது ஏழையின் குடிசையென்று நான் வேஷம் போடமாட்டேன். அமரிக்கையாயிருக்கிறார் களாம்! ஹம்பக்! நன்றாய் அனுபவி, நன்றாய் அனுபவிக்க நன்றாய் உழை. நன்றாய் உழைக்க நன்றாய் அனுபவி, இது தான் என் கொள்கை. இவை அத்தனையும்’-மறுபடியும் கை வீச்சில் மோதிரக்கல் பளிச்'- என் சித்தாந்தத்தின் அத்தாட்சிகள்.” கூட்டில் புலிபோல் அப்பா உலாத்த த-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/87&oldid=886390" இலிருந்து மீள்விக்கப்பட்டது