பக்கம்:தயா.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாய மான் 85 உணர்வு தத்தளித்துக் கொண்டிருந்ததோ என்னவோ? திடீரென என் எதிரே, பெரிய ஜன்னலை அடைத்துக் கொண்டு ஒரு ராட்சதச் சிலந்திக் கூடு காற்றில் படபடக் கின்றது. அதில் அங்குமிங்கும் முகங்கள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றன; தெரிந்த முகங்கள் தெரியாத முகங்கள், அப்பா, அம்மா, சாலா மாமி, நான். எங்கள் முகங்களும் தெரிகின்றன. கூட்டின் நடுவே சிலந்தியின் இடத்தில் கனத்ததொரு பின்னல் சுருண்டு கிடக்கின்றது, இரைதின்ற பாம்புபோல் அவ்வளவு கனம், இருத்தாற்போல் இருந்து அது சுருள் சுழன்று என் முகம் நோக்கி ஊர்ந்து வருகிறது. உடல் பின்னல், முகம் பாம்பு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, நான்தான் கட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறேனே! என்மேல் ஏறி என் கழுத் தைச் சுற்றிக் கொள்கிறது. எனக்கு மூச்சு திணறுகிறது: ஆனால் அது விடுவதாயில்லை. என் முகத்தில் இடம் தேடி, கழுத்தைக் கவ்வுகிறது, திடீரெனக் கைகள் எனக்கு எப்போது முளைத்தன? பாம்பின் உடல், சிண்டு சிண்டாய் என் கையில் ய்ேந்து வருகிறதேயொழிய கவ்விய கடி விடுவதாயில்லை. பற்கள் இரக்கமற்ற தீர்வையுடன் பதிந்து, அழுந்தி, சந்திக் கின்றன. ஐயோ ஐயோ! ஐயோ!! எப்படியோ பாம்புத் தலையை வெடுக்கென்று பிடுங்கியெறிகிறேன். அதுவும் மற்ற முகங்களுடன் கூட்டில் அது விழுந்த இடத்தில் மாட்டிக் கொண்டு விட்டது. அதன் வாயில் என் கழுத்துச் சதை கொத்தாய் அடைத்துக் கொண்டிருக்கிறது. என் கழுத்தில் கடித்த இடத்தைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன். ஐயோ! எவ்வளவு பெரிய, கோரமான தழும்பு என்ன மறைத் தாலும் மறைக்கவே முடியாது. இந்தத் தழும்பு போகவே போகாது. பாம்பின் முகத்தில் எவ்வள்வு பெரிய துயரம் பெரிய" என்றால் பற்றாது. துயரம் என்று விட்டதால் மட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/91&oldid=886395" இலிருந்து மீள்விக்கப்பட்டது