பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20



ஆனால், ஜின்கா பஸ் பிரயாணத்தின்போது மிகவும் ச ம் ர் த் தாக நடந்துகொண்டதும் அல்லாமல் பஸ் பயணிகள் அனைவரையும் தனது வேடிக்கைகளால் ஒருங்கே கவர்ந்துவிட்டது.
ஜின்காவிற்கு ரயில் பயணம் புதிதல்ல; ஆனால் பஸ் பயணம் புதிய அனுபவம். பஸ்ஸும் எக்ஸ்பிரஸ் பஸ். ஆகையால், அது மிகவும் அழகாகவும் புதியதாகவும் இருந்தது. பஸ்ஸில் ஒரு குழந்தை என்ன காரணத்தினலோ வீர்வீர் என்று அழத் தொடங்கியது. அதன் தாயார் எவ்வளவு சமாதானப்படுத்தியும் அழுகை நிற்கவில்லை. இது மற்றவர்களுக்குப் பெருந்தொல்லையாக இருந்தது.

உடனே ஜின்கா மெதுவாக அங்கே சென்று, அக்குழந்தையின் முன்னால் தன் ஆட்டத்தை காண் பிக்கவே, குழந்தை அழுகையை நிறுத்திவிட்டுச் சிரிக்கத் தொடங்கிற்று. பஸ்ஸிலிருந்த மற்ற பயணிகள் எல்லோரும் சிரித்தார்கள்.

ஜின்கா மிகவும் செல்லமாக இருப்பதையும் அதனால் யாதொரு தீங்கும் விளையாது என்பதையும் அறிந்துகொண்டன குழந்தைகள். அதனால் ஜின்கா வின் அருகில் தான்தான் உட்காருவேன் என்று ஒவ்வொரு குழந்தையும் போட்டி போட்டுக்கொண் டிருந்தது.

ஜின்கா அவர்களையெல்லாம் திருப்திசெய்யும் அளவிற்கு மிகவும் சாதுரியமாக நடந்துகொண்டது.