பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21



இப்படியாக ஜின்கா சுருண்டு தாவுவதும், பஸ் முழு வதும் சுற்றிச் சுற்றி வேடிக்கை காட்டுவதுமாக இருந்தது. தாயார் வள்ளிநாயகியைக் கண்டவுடன் அவள் பாதங்களில் விழுந்து வணங்குவதைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.

சுந்தரத்திற்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கோர் எல்லையே இல்லை. தரங்கம்பாடிச்சாலையில் இருபக்கங்களிலும் என்ன இருக்கிறது என்பதைக்கூடக் கவனியாமல் அவன் ஜின்கா செய்யும் வேடிக்கைகளிலே ஈடுபட்டிருந்தான். தங்கமணி மட்டும் சாலையில் இரு மருங்கிலும் என்ன இருக்கின்றது என்பதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான். கண்ணகி கொஞ்ச நேரம் ஜின்காவின் விளையாட்டைக் கவனித்துவிட்டு, ஒரேயடியாகத் துரங்கிவிட்டாள். தரங்கம்பாடிக்கு வருகின்றதே தெரியாமல் இவ்வாறு இனிது முடிந்து விட்டது பஸ் பயணம்.

'கும்பகர்ணி, எழுந்திரு' என்று கண்ணகியைக் கேலி செய்தான் சுந்தரம். இராமாயணத்தில் வருவது ஒரு கும்பகர்ணன். சுந்தரம், கும்பகர்ணி என்று அதைப் பெண்பாலாக்கிவிட்டான்!

கண்ணகி திடுக்கிட்டு விழித்தெழுந்தாள். பஸ் நிலையத்தில் ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டது. ஜின்காவிற்கு டாட்டா சொல்ல எல்லோரும் ஆவலாக இருந்தனர். பக்கத்தில் ஒரு பூக்கடை