பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25



"சுந்தரம், நீ பிறகு வரலாம். நான் முதலில் செல்லவேண்டும்” என்று அவசரமாகக் கிளம்பினான் தங்கமணி.

"ஆமாம், கோட்டை என்றால் நீ நிற்பாயா? சங்ககிரிக் கோட்டையின் மர்மத்தை வெற்றிகரமாக முடித்த உடனே இந்தக் கோட்டை கிடைத்திருக்கிறது. இந்தக் கோட்டையில் என்ன மர்மம் அடங்கி யிருக்கிறதோ, பார்க்கலாம். அதுவும் புதையலாக இருக்குமோ!' என்று கேட்டான் சுந்தரம்.

சுந்தரம் இவ்வாறு கேட்டதைக்கூடக் கவனியாமல் உடனே கிளம்பிவிட்டான் தங்கமணி. ஜின்கா அவனுடன் கிளம்பிற்று என்று சொல்லத் தேவையில்லை.

தரங்கம்பாடிக் கோட்டை மிக உறுதியாகக் கட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் நான்கடி, ஐந்தடி கனமான சுவர்களால் என்றும் அழியாதவாறு கட்டப்பட்டுள்ளதை அறிந்து தங்கமணி ஆச்சரியம் அடைந்தான். உலோகக் கண்டு பிடிப்பானைத் தங்கமணி நன்கு பயன்படுத்தினான். எங்கும் உலோகம் இருப்பதாக அது அறிவித்தது. இது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இந்தச் சமயத்தில் பைனக்குலரை கழுத்தில் ஒய்யார மாக மாட்டிக்கொண்டு சுந்தரம் அங்கு வந்து சேர்ந்தான்.

த-2

த-2