பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31



'இல்லை, நான் கொல்லிமலைக் குள்ளனுடைய வேலையைத் தொடர்ந்து செய்யச் சிறிதும் விரும்பவில்லை. தரங்கம்பாடிக் கோட்டை அடிக்கடி புயலாலும் இடி மின்னலாலும் தாக்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கோயிலோ பாழடைந்த நிலையில் இருக்கிறது. அதனால்தான் இந்த ஆராய்ச்சிக்குத் துணிந்தேன்' என்று விளக்கினான் தங்கமணி.

'டச்சுக்காரர் கோட்டையில் இந்துக்களின் நாணயம் கிடைப்பது என்பது என்ன நிச்சயம்?" என்று கேட்டான் சுந்தரம். -

'ஏன் மறுபடியும் கும்பாபிஷேகம் நடந்திருக்கக் கூடாதா. என்ன?’ என்று இடைமறித்தாள் கண்ணகி.

'கண்ணகியின் யூகமும் சரியாக இருக்கலாம். மேலும் இந்தக் கோயில் டச்சுக்காரர் கோட்டை கட்டுவதற்கு முன்னாலேயே ஏற்பட்ட ஆலயம். மாணிக்கவாசகரால் பாடப்பெற்றது என்றும், குலசேகர பாண்டியன் காலத்தியது என்றும், ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் கட்டியது என்றும் தெரிகிறது. அதனால்தான் எனக்கு இதில் அவ்வளவு அக்கறை ஏற்பட்டது. என்ன இருக்கிறது என்று தோண்டித்தான் பார்க்கலாமே!” என்றான் தங்கமணி.

'அது சரி. உலோகம் அகப்படும் என்று எப்படி நிச்சயம் பண்ணிணாய்?" என்று கேட்டான் சுந்தரம்,