பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
39



'சரி, நீங்கள் எல்லோரும் ஒட்டை வாய்கள். உளறிக் கெடுத்துவிட்டீர்கள். இதற்குத்தான் உங்களிடம் சொல்லத் தயங்கினேன் . ஆனால் இப்பொழுது பேசிப் பயனில்லை. உடனே நாம் கண்ணகியைக் கண்டுபிடித்தாக வேண்டும்' என்று கூறிக்கொண்டே செயலில் இறங்கினான். புதிதாக யார் யார் அந்த வட்டாரத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று வேகமாக ஆராயத் தொடங்கினான். அப்படி ஆராயத் தொடங்கியதும், புதிதாக ஆறு கூடார மடித்துக்கொண்டு ஒரு ஜிப்ஸிக் கூட்டம் தங்கியிருப் பதை அறிந்தான்.

'ஜின்கா, இனி உனக்குத்தான் வேலை அதிகம்' என்று கூறிவிட்டுப் பலவிதச் சைகைகளால் கண்ணகியின் இருப்பிடத்தைக் கண்டு வரும்படி ஜின்காவை ஏவினான் தங்கமணி. அதுவரை வேலை யில்லாமல் சோம்பிக்கிடந்த ஜின்கா, உற்சாகமாக ஜிப்ஸிக் கூட்டத்திலே தனது ஆராய்ச்சியைத் தொடங்கிவிட்டது.

சாதாரணமாக, ஜிப்ளி கூட்டத்தில் பெரியவர்கள் எல்லாம் பகல் நேரத்தில் வெளியே சென்று விடுவார்கள். குழந்தைகள்தாம் விளையாடிக் கொண்டிருக்கும். இந்தக் குழந்தைகளை எப்படி ஏமாற்றிவிட்டு, யாருக்கும் தெரியாமல் கண்ணகியைக் கண்டுபிடிப்பது என்று யோசித்தது ஜின்கா.

நல்ல வேளையாக நாவல் பழம் பழுத்திருந்த பருவம் அது. உடனே உயரமான ஒரு மரத்தில் ஏறி,