பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48



செய்திருந்தார். சில ஆண்டுக்கலாம் இவ்வாறு நடந்தபிறகு அந்த டேனிஷ் துரை அங்கிருந்து சென்றுவிட்டார்.

அவர் சென்றபோது புனித மரியம்மையின் சிலையையும் பெயர்த்தெடுத்துச் சென்றுவிட்டார். சிலை வைத்த இடத்தில் மற்றொரு சிலை வைக்க மக்கள் எண்ணினார்கள். ஒருவருக்குத் திடீரென்று ஒர் எண்ணம் தோன்றியது. 'ஒரு கன்னி மாதாவுக்குப் பதிலாக ஏழு கன்னிகளையும் (சப்த கன்னியர்) ஏன் அங்கு பிரதிஷ்டை செய்யக்கூடாது' என்று சொன்னார். அந்த எண்ணம் பெரும்பாலும் சரி என்று தோன்றியதால், அங்கே சப்த கன்னிகளைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகமும் நடத்தினார்கள்


நாளாக ஆக இந்த ஏழு கன்னியர்களும் ஒருங்கே இணைந்தாற்போல ஒழுகை மங்கலம் மாரியம்மன் தோன்றியது. அது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகக் கொண்டாடப்படுகிறது. புனித மரியம்மையே மாரியம்மனக உருவெடுத்திருக்கிறாள் என்றுகூட மக்களில் பலபேர் நம்பினார்கள்.

ஒழுகைமங்கலம் மாரியம்மனுக்கு ஆண்டு தோறும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்துக்களும் கிறிஸ்தவர்களும் ஒன்றாகக் கூடித் தொழுவார்கள். இவ்வாறு நடப்பதை இன்றும்