பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
53



போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் ஜவான்களுக்கும் உணவு அருந்தக்கூட நேரமில்லை. கொஞ்சம் தாமத மானால் தங்கள் திட்டம் எல்லாம் தோற்றுப்போகும் என்று நினைத்து, உடனே அவர்கள் இரவிலே மாசிலா நாதர் ஆலயத்திற்கு விரைந்து சென்றார்கள்.

அதற்குள் தங்கமணி எதிர்பார்த்தவாறே ஜிப்ஸிகள் அங்கே வந்துவிட்டார்கள். "எங்கே ஆராய்ச்சி நடக்கிறதென்று சொல்' என்று அதிகாரத் தோடு ஒரு ஜிப்ஸி கண்ணகியிடம் கேட்டான்.

கண்ணகி, போலீஸ் ஜவான்கள் உதவிக்கு நிச்சயமாக வருவார்கள் என்று நம்பியதால் தைரியமாகவே பதிலளித்தாள். 'இதோ, இந்தக் குழியில்தான் நாங்கள் கடப்பாரை கொண்டு தோண்டிணோம்" என்று சுமார் இரண்டடி ஆழம் உள்ள குழியைக் காண்பித்தாள் கண்ணகி. அடேயப்பா! இதென்ன இரண்டு முழ ஆழமாய் இருக்கிறதே. கொஞ்சம் தோண்டினல் உடனே புதையல் கிடைத்துவிடும் என்று எப்படிச் சொன்னாய்?’ என்று உறுமினான் மற்றொரு ஜிப்ஸி.

'நானும் சுந்தரமும் பேசிக்கொண்டதெல்லாம் உண்மைதான். இரண்டு மூன்று அங்குலம் அல்லது அரையடி தோண்டுவதற்கு முன்னதாகவே புதையல் கிடைத்துவிடும். அதுவும் நாளைக்கே கிடைத்துவிடும் என்று என்னுடைய அண்ணன் தங்கமணி கூறியிருந் தான். அவன் வாக்குப் பொய்யானதில்லை. வேண்டு -