பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10



வயிற்றை என்னல் சோதனைச்சாலையாக மாற்ற முடியாது."

"என்னடா, இப்பொழுதுதான் மதுரையிலிருந்து வந்திருக்கிறாய். உடனே புறப்படவேண்டும் என்கிறாயே ! ' என்று சிரித்துக்கொண்டே அவனுடைய மாமன் வ டி வே லு கேட்டார். வடிவேலு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒரு வரலாற்றுப் பேராசிரியர். அவருக்கும் கோடை விடுமுறை.

"ஆமாம், உடனே மதுரைக்குத் திரும்பிப் போகவேண்டும், மாமா. இந்த பீம பாகம் எல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது."

"அப்பா, இந்தக் கோமாளி பீம பாகத்துக்கும் நள பாகத்துக்கும் வித்தியாசம் தெரியாமலே பேசறான். நான் நள பாகத்தில்தான் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். சாப்பிட்டுப் பார்த்தால் பிறகு விடவே மாட்டான்."

"என்ன வித்தியாசமாம்?' என்று கேட்டான் சுந்தரம்.

"பீமன் பெருங்கூட்டத்திற்குச் சமைப்பதிலே கெட்டிக்காரன். நளன் நான்கு ஐந்து பேர் கொண்ட அளவான குடும்பத்திற்குச் சமைப்பதிலே