பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சு. சமுத்திரம் சம்பளம் ஐந்து மடங்கு பெருகப் போவதால் ஏற்பட்ட சபலம், அவரை, இந்தம்மாவிடம் ஆலோசனை கேட்க வைத்தது. இவளும், பையனை பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டியதையும், மகளை படிப்பின் மூலமோ அல்லது படித்த ஒரு மாப்பிள்ளை மூலமோ நல்லபடியாய் கரையேற்ற வேண்டிய அவசியத்தையும் கணக்கில் எடுத்து, அவரை கம்பெனி வேலையிலேயே சேரும்படி செய்துவிட்டாள். கை நிறையச் சம்பளமும், பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுகிற வசதியும் குடும்பத்திற்கு வந்ததில் அவருக்கும் ஆரம்பத்தில் மகிழ்ச்சிதான். ஆனாலும், அந்தக் கம்பெனி எல்லா அலுவரையும்போல் இவரையும், எந்தச் சமயத்திலும் கழுத்தைப் பிடித்துத் தள்ளலாம் என்கிற நிலைமை. கம்பெனி அவருக்கு வேலை போட்டுக் கொடுத்தது கூட, அந்த அரசாங்க அலுவலகத்திலிருந்து, அவரை நீக்குவதற்கு செய்யப்பட்ட தந்திரமாகவும் தோன்றியது. குறிப்பிட்டபடி சம்பள உயர்வும் கொடுக்கவில்லை. இந்த வஞ்சக வலையிலிருந்து மீளமுடியாமல், அழகேசன், சிலந்தி கவ்விய பூச்சியாய் துடித்தார். எப்படியோ ஒருவழியாய் கம்பெனி பொறுப்பிலிருந்து ஒய்வுபெற்ற பிறகுதான், மிச்சமாக ஒரு பைசாகூட தேறவில்லை என்பது அவருக்குப் புரிந்தது. வாயைக் வயிற்றைக் கட்டி சொந்தமாக கட்டிய வீட்டு வாடகையை வைத்து, வயிற்றுப் பிழைப்பை ஒட்டிவிடலாம் என்றாலும், நல்லது கெட்டதுக்கு அமெரிக்க மகன் கையை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம். இந்தக் கட்டாயத்தின் நிர்ப்பந்தத்தால், துக்கத்தை உருவகப்படுத்துவதுபோல் தோன்றிய அந்தக் கருப்பு டெலிபோனை அழகேசன் பரிதாபமாகவும், மங்கையர்க்கரசி கோபங் கோபமாகவும் பார்த்தார்கள். 'கோளாறு டெலி போனில்தான் இருக்கும்; மகனிடம் இருக்காது' என்பது அவள் கட்சி. மகனிடம் மட்டுமே கோளாறு என்பது அழகேசன் கட்சி. இப்படியாக இரண்டு மணி நேரம் கட்சி பிரிந்து ஒன்றாக