பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினை - விதை 89 அவர், "என்ன மங்கை இப்படி..?” என்று இழுத்து இழுத்துப் பேசினார். இந்த மாதிரி மனைவியிடம் அந்தக் காலத்தில்கூட, இப்படி அவர் குழைந்ததில்லை. உடனே அந்தம்மா, கரைக்காய் கூடாய் கருங்கிப்போன உடம்பை நிமிர்த்தியபடியே, ஒரு யோசனை சொல்ல முற்பட்டபோது, அழகேசன் பொத்தாம் பொதுவாய்ப் பேசினார். "ஆயிரம் இருந்தாலும், கவர்மென்ட் வேலை. கவர்மென்ட் வேலைதான் மங்கை. இதனாலதான் கழுதையை மேய்ச்சாலும், சர்க்கார் கழுதையா மேய்க்கணுமுன்னு சொல்லுவாங்க பதவியிலி ருந்து ஒய்வு பெற்றதும், பத்து லட்சம் ரூபாய் வரைக்கும் சொளையாய் கிடைத்திருக்கும். மாசா மாசம் பென்ஷனும் வந்திருக்கும். ஆறாயிரம் ரூபாய்ல ஒரு ஹெல்த்கார்டுவாங்கிட்டால், அரசாங்க ஆஸ்பத்திரியிலேயே இலவச சிகிச்சை. மகன், மகள் பக்கத்தில் இல்லாத நாம், சாகும்போதுகூட, அனாதையாச் சாகாம, டாக்டருங்க. நர்கங்க மத்தியில சாகலாம். கடைசியில புத்தியைக் கடன் கொடுத்துட்டேன்." மங்கையர்க்கரசிக்கு, அவர், தன்னைக் குறிவைப்பது புரிந்து விட்டது. முன்பெல்லாம் தாம் துரம் என்று குதித்திருப்பார். இப்போது அவர் நாக்கு கூட சுழல மறுப்பதை அறிவாள். அதேசமயம், தன்னையும் அவள் நொந்து கொண்டாள். கணவருக்கு அடங்கிப் போகவேண்டிய காலத்தில், இவரும் ஒரு அரசாங்க வேலையில்தான் இருந்தார். மகளும் மகனும் கல்லூரிப் படிப்புக்கு, திரளப்போன சமயம். இவருக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் பிடிப்புப் போக வரும். இந்தச் சமயத்தில், அலுவலகத்தில் இவரோடு தொடர்புகொள்ள வேண்டிய அவசியத்தில் இருந்த அரசு வாடிக்கைக் கம்பெனி ஒன்று, இவரது நேர்மையையும் திறமையையும் கண்டு, பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு நல்ல வேலையை கொடுக்க முன்வந்தது.