பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 க. சமுத்திரம் அந்தச் சமயம் பார்த்து, டெலிபோன் ஒலித்தது. அது வெளிநாட்டுச் சத்தம்போல் ஊளையிடாமல், மணி மணியாய் அடித்தது. அதனால் அவரும்பிக்கை கொண்டாலும், ஒருவேளை, அமெரிக்கக் குரல் மாறியிருக்கலாம் என்ற அனுமானத்தோடு, வேக வேகமாய் எடுத்தார். ஆனாலும் ஏமாந்தார். அவர் மனைவிக்கு எங்கிருந்தோ ஒரு கால். எதிர்முனைக்கு கேட்கும்படி ச்சோ போட்டார். அது, அந்த முனைக்காரிக்கு முத்தம் கொடுப்பதுபோல் ஒலித்திருக்கவேண்டும். அவள் வீட்டில் இல்லை. எப்போ வருவாங்கன்னு சொல்லமுடியாது' என்று கூசாமல் பொய் சொன்னார். மகனிடம் பேசுகிறார் என்ற அனுமானத்தில், அவருக்கு ஒத்தாசையாக உள்ளே வந்த மனைவியை கையமர்த்தி, “அந்தக் 'கால் வந்துடட்டும்..” என்றார். அவளை, தோளை அழுத்தி உட்கார வைத்தார். பிறகு இன்னொரு டெலிபோன் சத்தம். ஒடிப்போய் பற்றப் போனார். உடனே அந்தம்மா, "டெலிவிஷன்ல வர்ற டெலிபோன்” என்று சொல்லி, அந்த தொடரின் பெயரையும் சொன்னாள். வேறொரு சமயமாக இருந்தால், அந்தம்மாவின் பேசிய வாய் வாயடைத்துப் போகும்படி ஏசியிருப்பார். ஆனால் இப்போதோ, இவர், ஒடிப்போய் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒரு குமிழைத் திருகி, அதன் வாயைத்தான் அவரால் அடைக்கமுடிந்தது. அழகேசனும், மங்கையர்க்கரசியும் அந்த டெலிபோனையே அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆயிற்று. ஒரு மணி நேரம் உற்றுப் பார்த்தாயிற்று. வழக்கமாக பேசுகிறவர்கள்கூட, பேசவில்லை. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்தம்மா, மடியில் வலது கையை ஊன்றி, உள்ளங்கையில் முகம் போட்டு, அச்சில் பொருத்தப்பட்ட பூமி உருண்டை பொம்மைபோல் முகத்தை வைத்துக் கொண்டாள்.