பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினை - விதை அழகேசனுக்கு ஆண்டுக்கணக்கில் உண்டு உடுத்து நடமாடிய அந்த அறை, இப்போது அசல் சிறைபோலவே தோன்றியது. அவசர அவசியச் சூழல் போட்ட தடுப்புக்காவல் அறைபோல், அதிலிருந்து தப்பிக்க நினைத்தவர்போல் அங்குமிங்குமாய் கற்றினார். சுவரோடு கவராக உள்ள அந்த டெலிபோனையே உற்றுப் பார்த்தார். கருநாகம்போல் வளைவு வளைவான கருப்பு ஒயர்கள் கவ்விப்பிடித்த அந்த டெலிபோனுக்குள், தனது மகன் ஒளிந்து இருப்பதுபோலவும், எப்போது வேண்டுமானாலும் அவன் வெளிப்படலாம் என்பது போலவும் அவருக்கு ஒரு பிரமை. அழகேசன் பிரமை கலைந்தார். வழக்கமாக இந்த கிழமையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஒலிக்கும் டெலிபோன், இன்னும் ஒலி க்கவில்லை. ஒருவேளை, டெலிபோன் என்கேஜ்டாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டு, அதன் குமிழை எடுத்து, காதிற்குக் கொண்டுபோய், அதன் டயலிங் குரலை சரிபார்த்தார். பிறகு, அந்தக் குமிழை, மினி அம்மிபோல் இருந்த டெலிபோன் அடிவாரக்கருவியில் ஒரு குழவி போல பொருத்தினார். அப்புறம், அடியற்ற மரமாய் கட்டிலின் விளம்பில் இருந்து உள்நோக்கி நகர்ந்து, கால்களை நீட்டிப்போட்டு தலையை சுவரில் சாய்த்தார். அழகேசன், தனது வாழ்க்கையிலேயே இப்படி அந்த டெலிபோனுக்கு, எப்போதும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. ஒப்புக்கு பார்ப்பவர். இப்போது அதை மட்டுமே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.