பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 க. சமுத்திரம் குரலை இழுத்துப் பிடித்து, இந்த வீட்டு டெலிபோனுக்குள் ரசமாற்றம் செய்தது. ஆனாலும், ஒலித்துவிட்டு மீண்டும் ஊமையானது. அது, மீண்டும் ஒலிக்கும் என்பதை அனுபவத்தால் தெரிந்து வைத்திருந்த மங்கையர்கரசி, கணவருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தாள். "அவனோட ஒய்புதான் மொதல்ல எடுப்பாள். அவள்கிட்ட நான் பேசத் தயராய் இல்ல. போன தடவை, அவள் பேசின டோனே சரியில்ல. அமெரிக்கா போனாலும், மருமகள் என்கிறவள்களோட புத்தி மாறாது போலிருக்கு. அப்படி என்ன பெருசாய் கேட்டேன்? அமெரிக்காவுல லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிற என் பையனுக்கு, கல்யாணச் செலவையாவது ஏத்துக்கங்கன்னு சொன்னேன். அப்படியும் அவளோட அப்பா, அந்த செலவையும் நம்ம தலையில கட்டிட்டதால அவரை லேசாய் சத்தம் போட்டேன். அதை மனசில கருவிக்கிட்டு, ஒங்க மருமகள், என்கிட்ட பேசுற டோனே திமிராய் இருக்குது.” "அதுக்கு நான் என்னம்மா செய்யமுடியும்? நானே நொந்து போயிருக்கேன்." "அதுக்கு ஒரு வழி இருக்கு. டெலிபோன்ல அவள்தான் முதலி ல் வருவாள். அவள் கிட்ட பேசிட்டு, நம்ம பையன் லைன்ல வரும்போது, எங்கிட்ட கொடுங்க. நீங்களும் அவன்கிட்ட ஏதாவது பேகங்க. அவன் குரலைக் கேட்டதும், இந்தா ஒன் அம்மா'ன்னு, ஒங்களுக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி வழக்கமா, டெலிபோனை எங்கிட்ட கொடுப்பீங்களே. அப்படி கொடுக்காமல், அவன்கிட்ட ரெண்டு வார்த்தை நல்லபடியாய் பேகங்க” அழகேசன், சுருண்டு போனார். மனைவியை மலங்க மலங்கப் பார்த்தார். மாணவியாய் நடந்தது கொண்டவள், ஆசிரியையாய் நடந்து கொள்வதில் லேசான வருத்தம். ஆனாலும், அவள் சொல்வது நியாயம் என்ற யதார்த்தம்.மீண்டும் டெலிபோன் குரலிட்டது. அவர், டெலிபோனை தயங்கித் தயங்கி எடுத்தார். அது காதில்