பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினை - விதை 93 உரசியபோது, அவரது மகனே"ஹலோ என்றான்.அசல் அமெரிக்கன் கூட அப்படி உச்சரித்திருக்கமாட்டான். உடனே இவர், "நான்தாண்டா அப்பா பேசறேன்” என்றார்.அதேவேகத்தில் அவனும் கேட்டான். "சொல்லுங்கப்பா" ‘எப்படி இருக்கீங்கப்பா என்று எல்லா பிள்ளைகளையும் போல கேட்காமல், அவன் அப்படி பிசினஸ் லைக்காய் கேட்டதில், அழகேசனுக்கு சொற்தடை ஏற்பட்டது. வாலில்லாத ஒரு பூச்சி, தொண்டைக்குள் போவது போலவும், தலையில்லா ஒரு புழு வாய்க்குள் நெளிவது போலவும் தோன்றியது. ஒரு அந்நியனிடம் பேசுவதுபோல் 'சொல்லுங்கப்பா' என்று சொல்கிறவனிடம், சொல்லும்படியாய் என்ன பேசமுடியும்? ஆனாலும், அவர் சொல்லி வைத்தார். முன்பின் பழக்கமில்லாதவர்கள், அறிமுகம் செய்யப்படும் போது, பொதுப்படையாக பேகவோமே - சீதோஷ்ண நிலை, பந்த் ஊழல், கிரிக்கெட் என்று - அப்படிப்பட்ட குரலில் பேசுவதற்காக பேசுவதுபோல் பேசினார். அது, ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்பதற்கு முன்பு, குடு குடுப்பை ஆட்டுவானே, அப்படித்தான் அவருக்கு உறைத்தது. "வேலையெல்லாம் எப்படிடா இருக்குது?" அமெரிக்க மகன் பதிலளிக்க முயற்சித்தபோது, அவனை இருமல், மொழி மறித்ததுபோல் தோன்றியது. அந்த ஒரு கணத்தில் அழகேசனின் மனம், வாய்க்காலை உடைத்த நீர்போல, பயிர்களுக்குப் பாயாமல், காய்ந்து போன நிலத்தின் இடுக்குகளில் தாவுவதுபோல் தோன்றியது. அப்போது, கணிப்பொறி பட்டப் படிப்பில், தனித்துவமாய் மதிப்பெண்கள் வாங்கிக் கொண்டிருந்த அந்தக் காலத்து இந்தியனான இளங்கோவை, ஒரு தனியார் கம்பெனி, கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி, எடுத்த எடுப்பிலேயே பதினைந்தாயிரம்