பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. க. சமுத்திரம் சம்பளம் வழங்க முன்வந்தது. நாட்டில் ஐந்தாண்டுத் திட்டம் மெள்ளமாக போனாலும், அதே காலக்கட்டத்தில் இவன் சம்பளத்திட்டம், நாற்பதாயிரத்தை தொடும் என்றும் தெரிவித்திருந்தது. அழகேசன், அந்த நல்ல செய்திவந்த, அந்த ஒரு நாளில் கடுகடுப்பாக இல்லை. யாரையும் எடுத்தெறிந்து பேசவில்லை. பிள்ளையை,பெற்றவன்போல் பார்த்தார். ஆரம்பத்தில் வாமனமாய்க் குழைந்து, இப்போது விகவரூபம் எடுத்திருக்கும் தனது கம்பெனியை இனிமேல் எதிர்த்துப் பேசலாம் என்ற நம்பிக்கை. சொந்தமாக ஒரு வீடு கட்டி, ஒய்விற்குப் பிறகும் ஒரு வீட்டுக்கார பாஸோ அல்லது மேடமோ இல்லாமல் நிம்மதியாகக் காலத்தைக் கழிக்கலாம் என்ற மனக்கணக்கு கூடவே, பிளஸ் டு முடித்த மகளை, இவனை மாதிரி ஒரு கணிப்பொறி என்ஜினியரின் தோளில் ஏற்றி,மகளை ஆனந்தப் பரவசமாய் பார்க்கலாம் என்ற இன்னொரு மனக்கணக்கு. ஆனால் இளங்கோ, அத்தனை கணக்குகளையும் பொய்மைப்படுத்த முயற்சித்தான். ஜி.ஆர்.ஏ. பரீட்சை எழுதி அமெரிக்காவில் மேற் கொண்டு படிக்க தகுதி பெற்றுவிட்டானாம். மூன்று அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்திருக்கிற தாம். ஆனாலும் உதவிப்பணம் கிடைக்குமா என்பதை உடனடியாய் சொல்ல முடியாதாம். இவனே, பணத்தோடு போகவேண்டுமாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படுமாம். அழகேசன், அவனிடம் நயந்து பேசினார். உள்நாட்டு வேலையே உசத்தி என்றார். இதையே, மனைவியையும் பேகம்படி கூறினார். மங்கையர்க்கரசியும் பேசினாள் - மகனுக்கு ஆதரவாய். 'வங்கிக் கடன் வாங்கலாமே என்று வக்காலத்து வாங்கினாள். அழகேசன், மனைவியை மட்டுமல்ல, மகனையும் நோக்கி கை ஓங்கினார். கனவுகள் பொய்த்த நனவுத் தளத்தில் அவர், ருத்ரதாண்டவமாய் குதித்தார். வங்கிக்கடன் வாங்கப்போவதில்லை என்று தனது சாவின் மீது சத்தியம் செய்தார். ஆனாலும் பயல், கடப்பாரையாய் கிடந்தானே தவிர அசையவில்லை. ஒரு மாதத்தில்,