பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினை - விதை 95 அவர் கண் முன்னாலேயே பணக்கார நண்பர்கள் மூலமும், அம்மாவின் மெளனச் சம்மதத்தின் அடிப்படையிலும், அமெரிக்கா போய்விட்டான். எம்.எஸ். படிப்பையும் முடித்துவிட்டு, இப்போது ஆறாயிரம் டாலர் மாதா மாதம் வாங்குகிறான். அழகேசன், அவன் அமெரிக்கப் படிப்பிற்கு ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் இருந்தோமே என்று இப்போது ஒரு துரும்பாய் சிறுமைப்பட்டார். அவனது அமெரிக்க வழியில், சாலை மறியல் செய்து, தாதாவாய் நடந்துகொண்ட தந்தைக்கு, மகனின் வேலையைப் பற்றிக் கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது, என்றும் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டார். இந்தச் சமயத்தில் அழகேசனின் காலமான தந்தை, இவரின் கண்களில் வந்து விரலாட்டுவதுபோல் தோன்றியது. சுழலப்போன நாக்கை பிடித்திழுப்பதுபோல் ஒரு வலி. பெற்ற தந்தையை சரியாக கவனிக்க முடியாத, தான், மகனிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்று மனதுக்குள்ளேயே ஒரு கேள்வி. அந்தக் கேள்வி விடையில்லாமலே முற்று பெறும்படி, அமெரிக்க மகன் ஏதோ பதிலளிக்கிறான். இவருக்கு, அவன் சொற்கள் கேட்கிறதே தவிர, அவற்றின் பொருள் புலப்படவில்லை. சர்வ வல்லமையுள்ள மேலதிகாரியிடம் பேகம்போது, எப்படிக் கூனிக் குறுகி நிற்பாரோ, அப்படி நின்றார். அப்போது வேர்த்தது போலவே, இப்போதும்வேர்த்தது.இதுபுரியாமல் அமெரிக்கமகன்,'அப்புறம்பா. என்றான். அழகேசனுக்கு ஒரு சந்தேகம். அப்புறம் அப்பா என்கிற வார்த்தைகளை ஒட்ட வைத்துப் பேசுகிறானா அல்லது வேலைக்காரனிடம் பேசுவதுபோல் பேசுகிறானா என்கிற சந்தேகம். ஆனாலும் தான் பேகவது தனக்கே புரியாமல் பதிலளித்தார். "அப்புறம் எப்படிடா பொழுது போகுது? அந்தக் கேள்வியை வரவேற்பதுபோல், அவன் உற்சாகமாக, நயாகரா நீர்வீழ்ச்சி, ஜிம், பனிச்சறுக்கு, தமிழ்ச்சங்கம் போன்ற வார்த்தைகளை கொட்டிக்கொண்டே இருந்தான். அழகேசனுக்கு