பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 க. சமுத்திரம் மேலும் ஒரு சந்தேகம். ஒங்களால் கொடுக்க முடியாததை நான் அனுபவிக்கிறேன்' என்று குத்திக் காட்டுகிறானோ..? அதற்குள், அந்த அமெரிக்க மகனுக்கு இன்னொரு தொடர் இருமல். தந்தைகாரருக்கு, இன்னொரு நினைவு பூதாகரமாய், அவர் அகத்தையும் புறத்தையும் ஆக்கிரமித்தது. இளங்கோ ஒன்பதோபத்தோ படித்த காலம்,பள்ளிக்கூடத்தின் சார்பில் சுற்றுலா போகவேண்டுமாம். அவனது கல்வி நிலையம் 'கொழுத்த பள்ளிக்கூடம் என்பதால், அவர்கள் கேட்டதொகையிலும் கொழுப்பேறியிருந்தது. அப்போதுதான் அழகேசன், ஜி.பி.எப், தீபாவளி அட்வான்ஸ், ஸ்கூட்டர் அட்வான்ஸ், பொங்கல் அட்வான்ஸ் என்று அத்தனை அட்வான்சுகளுக்கும், அசல் சம்பளத்தில் பாதியை பறிகொடுத்த நேரம். அந்த இயலாமையில் வீட்டுக்கு வந்தவர், அங்கே இருந்த இளைத்தவர்களிடம் கோபமாக எகிறினார். அந்தச் சமயம் பார்த்து, மகனின் சுற்றுலா தேவையை, இதே இந்த மங்கையர்க்கரசி உணர்த்தியபோது, இவர், தகப்பன் கோவணத்தில் இருக்கிறானாம்; மகன் இழுத்துமூடப்பா என்றானாம். என்று ஒரு கிராமப் பழமொழியை இளக்காரமாக சொன்னார். உடனே இந்த இளங்கோ, அப்போது அப்பாவிடம் இருந்து வணம் வாங்கிக் கொடுப்பதாக வாக்களித்த அம்மாவை முதுகைப் பிடித்து தள்ளினான். வலிக்காத தள்ளல். இந்தம்மா கூட சிரித்தாள். என்றாலும் இந்த அழகேசனோ, பையன் மேல் பாய்ந்தார். 'அம்மாவை தள்ளுவியா. தள்ளுவியா. என்று அவனை புரட்டி எடுத்தார்.தடுக்கவந்தமனைவியைகீழே தள்ளிப்போட்டார்.மீண்டும் மகனை அடித்தார். அவர் அடித்த தோரணை, அம்மாவை அப்படி தள்ளியதற்காக இல்லை என்பது போலவும், அவன் கற்றுலாவிற்கு போகக்கூடாது என்பது போலவும் தோன்றியது. அதுவரை, அவர் வீட்டுக்குள் வரும்போதும் போகும்போதும், அவர் இடுப்பைக் கட்டிக்கொண்டு அப்பா அப்பா என்று கொஞ்சுகிறவன்தான்.