பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினை - விதை 97 அன்றுமுதல் ஒதுங்கிக் கொண்டான். அவர் சாலையில் வரும்போது, எதிர்ப் பக்கமாக நடப்பான். வீட்டுக்குள் இருக்கும்போது, ஒரு அறைக்குள் முடங்கிக் கொள்வான். அவருக்கும் அலுவலக நெருக்கடிகளில், இது ஒரு பெரிய காரியமாகத் தெரியவில்லை. இந்தப் பகையை மறந்து, அவன் பழையபடி மகனாகப் போனவேளை. வீட்டுக்கு முன் உள்ள மைதானத்தில், பொழுது போக்காக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த அழகேசன், அவனிடம் 'எலக்ட்ரிசிடி பில் கட்டிட்டியா? என்று நேரிடையாகக் கேட்டார். காலையில் அவன் அப்படிக் கட்டவேண்டும் என்று மனைவியிடம் பணம் கொடுத்துவிட்டுப் போனவர். தந்தையோடு, நான்காண்டு களாக பேச மறுத்து, அதேசமயம் மனதுக்குள் மருவிக் கொண்டிருந்த இளங்கோப்பையன், தந்தையிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்ச்சியில் ஒருவேளை, அவரே முதலில் பேசிவிட்ட வெற்றிப் பெருமிதத்தில், அம்மா பணம் தரல. அதனால...' என்கிற நான்கு வார்த்தைகளை தந்தையிடம் பேகவதாக தனக்குள் பேசிக்கொண்டு பின்னர், கட்டல' என்று ஒற்றைச் சொல்லை உதிர்த்தான். அழகேசன், அது இல்லாத ஈசனானார். மகன்மேல் பாய்ந்து, அவனைக் கீழே தள்ளினார். அவன் சட்டைக் காலரைப் பிடித்து துாக்கி நிறுத்தி, குஸ்திப் பயில்வான்கள் துணியிடப்பட்ட மணற்பொம்மைகளை குத்துவார்களே, அப்படிக் குத்தினார். அவன் கிரிக்கெட் ஸ்டெம்ப் மீது விழுந்தான். அந்தக் குச்சிகள் போலவே கிடந்தான். மங்கையர்க்கரசி ஒடி வந்தாள். கணவன், பகிரங்கமாகத் தன்னையும் ஏசலாம் என்பது தெரிந்தும், அவரை ஆங்காரமாகப் பார்த்தாள். இது ஒரு தகப்பன் செய்கிற காரியமா? என்றும் கண்களில் புனலும், வாயில் அனலும் கனக்கக் கேட்டாள். பழைய நினைவுகளில் மூழ்கி, முத்தில்லாத சொத்தைச் சிப்பிகளை எடுத்துக் கொண்டிருந்த அழகேசனை, மகன்