பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலாக்கள் அந்த அறையில் நான்கு பக்கச் கவர்களையும் மறைத்து, அவற்றில் ஆடை ஆபரணங்கள்போல் வழுவில்லா வழுவழுப்பாய் ஜொலித்த சன்மைக்கா கலந்த காகிதக் கலவை, பல்வேறு வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவிய ஒயிலுடன் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருந்தபோது - ஜெனரல் மானேஜர் டி.கே. ராமன் இன்டர்காமில், ஏதோ ஒரு பெரிய போருக்கு, வியூகம் சொல்லிக் கொடுப்பதுபோல், கத்தோ கத்தென்று கத்திக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில், பூமியின் பாரத்தைத் தனியொருத்தியாய்த் தாங்குவதுபோல் புருவத்தைச் சுழித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் சுகந்தி. ஒப்பாளி வைப்பதுபோல் ஒலித்த டெலிபோனை எடுத்து 'எஸ் பிளிஸ் என்று அவள் படு ஒப்பாரி போட்டபோது, ஜெ.எம். இன்டர்காமில் ஒன் மினிட்' என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்து, அந்த ஃபைலைக் கொடுக்கலியா? என்று கேட்டார். 32 ரிசீவரில் காது வைத்த ககந்தி, "எஸ். சார்...” என்று சொல்லிக் கொண்டே, எம்.டி. வீட்டிலிருந்து பேசுகிறார் ஸார் என்று சொல்லி டெலிபோனை நீட்டினாள். மேனேஜிங் டைரக்டரின் குரல் சலிப்போடும் வலிப்போடும் ஒலித்ததில் இருந்து அவர், தம் வீட்டில் இருந்துதான் பேசவேண்டும் என்று அவள் அனுமானித்து புன்னகைத்தபோது, ரீசிவரை வாங்கிய டி.கே. ராமன், அவளைப் பார்த்து, "அந்த பைலை என்ன பண்ணினே?” என்று சொல்லிக் கெண்டே "ஹலோ” என்றார்.