பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலாக்கள் |O) எதிர் முனையிலிருந்து 'என்னய்யா இது...? நான் கேட்கவேண்டிய கேள்வியை நீங்க கேட்கறிங்க. அதுவும் மரியாதை இல்லாமல்..” என்ற குரல் விழுந்து, சுகந்தி காதிலும் கம்பிக் குரலாகத் தாவியது. ஜெனரல் மானேஜர், "எஸ். ஸார். ஸாரி ஸார். ஷூர் சார். டெபனட்லி ஸார். ஓ.கே. ஸார். உடனே ஸார்.” என்று அஷ்டோத்ர ஸார்களைப் போட்டு, உரையாடலை முடித்துவிட்டு, ரிசீவரை அதன் இருப்பிடத்தில் வைக்கக்கூட நினைவில்லாதபடி, அதை எடுத்துத் தம் முன் நெற்றியில் அடித்துக் கொண்டார். "அந்தப் பைலை எம்.டி. கிட்டக் கொடுக்கலியா..? என்னம்மா நினைச்சுக்கிட்டீங்க. அக்கெளண் டண்டைப் பார்த்து சம்பளத்தை செட்டில் பண்ணுங்கோ...” என்று மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டே போனார். ககந்தியின் உடம்பை நாடி நரம்புகள் இழுத்துப் பிடித்து விறைக்கவைத்தன.வியர்வைச்சுரப்பிகள் வேகமாகச்செயல்பட்டன. நெற்றி மேளம் போல் விம்மியது. வாய், உதடுகளை முன் குவித்துக் கூம்பியது. எந்த பைல் ஸார்.? என்று கேட்கப் போனாள். பிறகு, 'இதுகூடத் தெரியலியா..? என்று அந்த பெல்லோ கத்துவானே என்று நினைத்தவள் போல, பேசாது, பெருவிரலால் பிளாஸ்டிக் தரையில் அரை வட்டம் போட்டாள். டி.கே. ராமன் என்ற ஜெனரல் "மானேஜர் கம் நெருப்புக்கோழி அவசரமாகச் சொன்னது. "போன புதன்கிழமை,எம்.டி. கிட்டபெர்சனலாய்க்கொடுக்கச் சொல்லிக் கொடுத்தேன் பாருங்கோ. ஒரு கான்பிடன்ஷியல் பைல். படிக்காமலே கொடுக்கும்படிச்சொன்னேன் பாருங்கோ. அதுதான். பில்டிங் டெண்டர் பைல். அதுதான். ஜே.கே. பிரதர்ஸுக்கு கான்ட்ராக்ட் கொடுக்கும்படி சிபாரிசு செய்த பைல். அதை நீ கொடுக்கவில்லையா? ஹைலி கான்பிடன்ஷியல் பைல். கொடுக்கலியா..? கொடுக்கலியா..? கொடுக்கவே இல்லியா..?" என்று 'யா'வில் பல ஆக்களைப் போட்டார். சுகந்திக்கு, வேலை பார்க்கும்போது, ஏற்படுவது போன்ற ஆயாசம் ஏற்பட்டது. அந்த பைலை இந்த டி.கே.ராமன் கொடுக்கச்