பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தராசு கைத்தறி லுங்கியை, செம்மண் நிறத்துப் பேண்ட்டால் அகற்றிவிட்டு, பாடாவதி பனியனை வெளுத்துப்போன வெள்ளைச் சட்டையால் மறைத்துக் கொண்டு, ஒப்புக்குத் தலையை வாரியபடியே கண்ணாடியை வேண்டா வெறுப்பாய்ப் பார்த்த விசுவநாதனை, செந்தாமரையும் அவனை மாதிரியே பார்த்தாள். ஸ்டவ்வில் பூனை குத்துக் காலிட்டு உட்கார்ந்திருப்பதை சொல்லத்தான் போனாள். ஆனால் - அதற்குள், வீட்டிற்கு வெளியே நடுரோட்டில் டெப்டி டைரக்டரின் கார், கரடுமுரடாய்ச்சத்தம் போட்டபடியே நின்றது. காருக்குக் குறைச்சவில்லை. வழக்கமாய் வருவதுதான். ஆனால் அன்று ஏனோ, காளின் குரல் படபடத்தது. டிரைவர் ஹாரனை வயலின் வாசிப்பதுபோல் உகப்பினார். விகவநாதனிடம் சொல்லப்போனதை மறந்து, செந்தாமரை அவன் கையில் காகிதப் பார்சலைத் திணித்தாள். அவள் புடவை மாதிரியே கசங்கிய அந்தப் பொட்டலத்தை துரக்கு பையில் போட்டபடி, விகவநாதன் காருக்கு அருகே போய் சல்யூட் மாதிரி வலதுகையைவளைத்தான்.உள்ளே இருந்த வயிறு பெருத்த டெப்டி டைரக்டர், கார் கதவைத் தள்ளிவிட, அவன் உள்ளே போனான். செந்தாமரை தத்தளித்தாள். எப்படியாவது சொல்லியாக வேண்டும். அவள் முகபாவனையை விகவநாதன் பார்க்கவில்லை. டெப்டி டைரக்டர் பார்த்து விட்டார். "என்னம்மா விஷயம். வெளில போறியா?”