பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 க. சமுத்திரம் ரேக்குகளை இழுத்தார்கள். அலமாரிகளைக் குடைந்தார்கள். மெத்தை விரிப்பைத் துாக்கிப் பிடித்து, உற்றுப் பார்த்தார்கள். சோபா செட்டுக்களுக்குக் கீழேயும் குனிந்தார்கள். மானேஜிங் டைரக்டரும், ஒரு அனிச்சைச் செயலாக, அங்குமிங்கும் கற்றினார். பிறகு, தம் இருக்கையில் அமர்ந்து, டிராயரை இழுத்து, சிகரெட்டை எடுக்கப் போனார். தற்செயலாக உள்ளே ஒன்று தென்பட்டது. என்னது. அடேடே ஞாபக மறதியில் இங்கே வச்சுட்டேன் போலிருக்கு. அட, கடவுளே. அதே அந்தரங்க பைல். அதே. அதே." அலமாரிகளைப் பிடித்து, பீரோக்களை இழுத்து, கடைசியில் எம்டியின் மேஜையைக் குடைவதற்காக, டி.கே.ராமனும், சுகந்தியும் அவரருகே வந்தபோது,மானேஜிங் டைரக்டர் டக்கென்றுடிராயரை மூடினார். பைல் இங்கே இருந்தால், நான் இடியட்னு அர்த்தம்' என்று சொல்லிவிட்டு, அப்புறம். கூடாது. காட்டக்கூடாது. சொல்லக்கூடாது. மானேஜிங் டைரக்டர், இருவரிடமும் ஆணையிடுவதுபோல் பேசினார். "நான் இங்கேநல்லாத்தேடிட்டேன்.எதுவும் இல்லை.மிஸ்டர் டி.கே. ராமன். ஒங்க ரூமுக்குப் போய்த் தேடலாம். வாங்கோ" இப்போது, மானேஜிங் டைரக்டரின் மேலான தலைமையில், டி.கே. ராமன் அறையில் தூள் பறக்கிறது. கல்கி, 15-3-1981. ©