பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலாக்கள் 107 இரண்டு சபார்டினேட்டுகளும் தலைகளைத் தாழ்த்தியபோது, எம்.டி. தம்மைப் பற்றித் தமக்குள்ளேயே எழும் சந்தேகங்களை, இப்போது கேள்விகளாகத் தொடுத்தார். "நான் என்ன. ஒன்றும் தெரியாத மக்கா..? அப்ளவர்வ் பண்ணத் தெரியாத அசடா..? மேஜையில் இருக்கிற பைலைக் கண்டுபிடிக்க முடியாத ஆபீஸரா..? வாட் ஈஸ் திஸ். டோண்ட் டாக்" சபார்டினேட்டுகளின் தலைகள் இன்னும் நிமிராதபோது, எம்.டி., இப்போது பெருமிதமாகப் பேசினார். "ஒரு குண்டுசி இருந்தால்கூட கண்டுபிடிக்கிறடைப் நான். ஒரு பேப்பர் வெயிட்டை அரை அங்குலம் நகர்த்தி வைத்தாலும், அறியக்கூடிய டைப் நான். நீங்க கொடுத்ததாய்ச் சொன்ன பைல் இப்போ இங்கே இருந்தால், நான் இடியட்னு அர்த்தம். திறமை இல்லாத நபர்னு மீனிங். டோண்ட் டெல் மி காக் அண்ட் புல் ஸ்டோரி.” டி.கே.ராமனின் தலை,முன்னிலும் அதிகமாகத் தாழ்ந்தபோது, சுகந்தி, தலையை நிமிர்த்தி, சுவரைப்பார்த்துக்கொண்டே பேசினாள். "நீங்க பிஸி ஆபீஸர் ஸார். உங்களுக்குப் பதிலாய், இந்த சீட்ல யார் இருந்தாலும் சமாளிக்க முடியாது. ஊழியர்கள் ஒவ்வொருவரும், எம்.டி. தங்களையே தனிப்பட்ட முறையில் 'வாட்ச் பண்ணிட்டு இருக்கிறதாய், ஒரு பிரமையைக் கொடுக்கிற அளவுக்கு நிர்வாகம் செய்யறிங்க... பட். ஆனாலும், நான் வச்ச பைலை ஒங்க பியூனே. தவறுதலாய் எங்காவது வச்சிருக்கலாம் இல்லியா..? ஜி.எம். ஸார். வாங்க தேடிப் பார்க்கலாம்.” புகழாரம் கழுத்தில் சுருக்குப் பிடி போட, மானேஜிங் டைரக்டர் எதுவும் புரியாமல் விழித்தபோது, டி.கே. ராமனும் சுகந்தியும், எம்.டி.யின் அறையில், ஒவ்வொரு மூலையிலும் இருந்த பைல் கட்டுக்களைக் குடைந்தார்கள். பீரோக்களைத் திறந்தார்கள்.