பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 க. சமுத்திரம் குறிப்பேட்டுடன் குறிப்பறிய நின்றாள். "கிவ் மீ ஒன் அவர் டயம் ஸார் என்று அழும் குரலோடு சொல்லிக் கொண்டே டி.கே. ராமன் வெளியே வந்தபோது, ககந்தி எதிரேயிருந்த'டாய்லட் அறைக்குள் போய் ஒளிந்து கொண்டாள். அங்கேயே காத்திருந்தாள். கால்மணி நேரத்தில், எம்.டி போய்விட்டார். அவரது பியூன், குறட்டை விட்டார். ஸ்டேனோ மங்கை எங்கேயோபோய்விட்டாள். சுகந்தி, அடி மேல் அடி வைத்து, அம்மி நகர்வதுபோல், கால்களை நகர்த்தி, எம்.டி. அறைக்குள் நகர்ந்தாள். அந்தக்குளுகுளுப்பு அறையில் இருந்த கிளுகிளுப்பான சோபா செட்டையும், கழல் நாற்காலியையும், பூதாகரமான மேஜையையும் உற்றுப் பார்த்துக் கொண்டே, முன்னேறினாள். எம்.டி.யின் இருக்கைக்கு அருகே வந்து, படபடப்புடன் நோட்டம்விட்டாள்.நல்ல வேளையாக, மேஜை டிராயர் ஒன்று, ஒருசில உபயோகமில்லாத தட்டுமுட்டுச்சாமான்களுடன் பாதியறைதிறந்தவெளிக்கோலத்தில கிடந்தது. அதை இழுத்து முந்தானைக்குள் இருந்த பைலை எடுத்து திணித்து உள்ளே தள்ளிவிட்டு, ஒரே ஒட்டமாகத்திரும்பி ஓடியவள், தன் சொந்த இருக்கைக்கு வந்த பிறகே மூச்சுவிட்டாள். ஒரு மணி நேரம் ஒய்ந்தது. எம்.டி.யிடமிருந்து மீசைக்கார பியூன் வந்து, அவளைப் பார்த்து, எம்.டி. அறைக்கு உடனடியாய் வரும்படி அலட்சியமாக சைகை மூலம் தெரிவித்து விட்டுப் போய்விட்டார். ககந்தி, எம்.டி.யின் அறைக்குள் போனபோது, அவர், டி.கே. ராமனைத் தாளித்துக் கொண்டிருந்தார். மானேஜிங் டைரக்டர், தமது இளமைக் காலத்தை நினைவு படுத்துவதுபோல் கத்தினார். "அப்படின்னா. அந்த பைலை நான் விழுங்கிட்டேனா..? பழைய பேப்பர்காரன்கிட்டே வித்துட்டனா..?”