பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலாக்கள் 105 கொடுக்காமல் கூட கொடுத்ததாய் நிரூபிக்கிறதுதான் முக்கியம்' என்று டி.கே. ராமன், பித்துக்குளி ராமனாய்ச் சொன்னது, அவள் சித்தத்தில் இருந்த பித்தத்தை நீக்கித் தெளிய வைத்தது. பைலைக் கொடுக்காமலே கொடுத்ததாய் நிரூபிக்கணும். அப்போதுதான் சஸ்பென்ட் வராது. அப்போது தான் டிஸ்மிஸ் வராது.” டி.கே.ராமன்,'அய்யோ-நான் பிள்ளைக்குட்டிக்காரனாச்சே." என்று பச்சைக் குழந்தையைப்போல், புலம்பிக் கொண்டே திரும்பிப் போனார். ககந்திக்கு லேசாகச் சிரிப்புக்கூட வந்தது. "இந்த மானேஜருக்கு நிர்வாகத் திறமை இல்லையே..? நானாக இருந்தால், 'அந்த பைலை மறந்திட்டீங்க போலிருக்கு. பரவாயில்லை. ஒண்னும் குடி முழுகிடல. அதுவும் நல்லதுக்குத்தான். ஒரு கரெக்ஷன் பண்ணனும் கொண்டு வாங்க என்ற பதமாகச் சொல்லி , கிளார்க் கொண்டு வந்ததும், குரல்வளையை ஒரே பிடியாய்ப் பிடித்திருப்பேன்." டி.கே. ராமன், தம் அறைக்குள் பைத்தியம்போல் கற்றிக் கொண்டிருந்தபோது, சுகந்தி, நாற்காலியில் டங்கென்று உட்கார்ந்தாள். டி.கே. ராமனின் 'கொடுப்பது முக்கியமல்ல. கொடுத்ததாய் நிரூபிப்பதுதான் முக்கியம் என்ற வார்த்தைகள் காதுகளில் வலம் வந்தன. அப்படி நிரூபித்தால்தான், தானும் தப்பமுடியும், அந்த அசடும் தப்பலாம். அது தப்ப வேண்டும். அப்போதுதான், 'பிரியாய் இருக்கலாம். ஒவ்வொரு ஊழியரும், தனக்கு மேலே இருப்பவர் அசடாக இருந்தால், அந்த ஆசாமியை நேசிப்பதுபோல், ககந்தியும், இப்போது டி.கே. ராமனை நேசித்தாள். இந்த பைலை என்ன செய்யலாம்.? சுகந்தி, எம்.டி. அறைக்கருகே போனாள். எம்.டியோ, டி.கே. ராமனை நோக்கிக் கையைக் காலை ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தார். ஸ்டேனோ பெண் ஒருத்தி, கருக்கெழுத்து