பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. சு. சமுத்திரம் கமையாக, நாற்காலியில் பொத்தென்று உட்கார்ந்தாள். தனக்கு தானே பேசிக் கொண்டாள். 'பைல் கிடைச்சால் சஸ்பெண்டாம்; கிடைக்கவில்லை என்றால் டிஸ்மிஸ்ஸாம். அவள் பொருமிக்கொண்டாள். இப்போது, நிஜமாகவே ஒரு சொட்டு - ஒரே சொட்டுக் கண்ணிர் வந்தது. வெறுமையுடன் அங்குமிங்குமாய்ப் பார்த்தாள். தனது கண்கள் கலங்குவது, எதிர் வரிசை இளசில்லாச் சிட்டுக் குருவிகளுக்குத் தெரியவேண்டாம் என்பதுபோல் கீழே குனிந்தபோது - மேஜையின் கீழே மத்தியில் போடப்பட்ட கம்பியின் பாதி நீளத்தை அடைத்துக் கொண்டு ஒன்று கிடந்தது. விவசாய கூலிப் பெண்ணின் குழந்தை திண்ணையில் குப்புறக் கிடப்பதுபோல், கிடந்த அந்த ஒன்றை எடுத்தாள். அடடே... அடேயப்பா. ஹை.. கான்பிடன்ஷியல் பைல்! அதுவும் ஹைலி கான்பிடன்ஷியலான அதே அந்தப் பைல்தான். அதன் ரேப்பரில்' ககந்தி தெரியாமல் மிதித்த செருப்புச் சுவடு அட்சர கத்தமாகத் தெரிந்தது. இன்னொரு கவடும் மங்கலாகத் தெரிந்தது. ஒருவேளை, பாய் பிரண்டு கோபால்தாஸின் பூட்ஸ் கவடோ என்னவோ..? அவள், அந்த பைலை விரித்துப் பார்த்தபோது, ஜெனரல் மானேஜர் டி.கே. ராமனே, அங்கு தலைவிரிகோலமாக ஓடிவந்தார். "பைல் கிடைச்சுதா..? நல்லாத் தேடுனிங்களா..? நானும் தேடுறேன்.” டி.கே. ராமன் சொல்லிவிட்டு நிற்கவில்லை. அவள் மேஜை டிராயரை இழுத்தார். அங்கே இருந்த மேக்கப் சாமான்களை எடுத்து, கையில் தூக்கி கான்பிடன்ஷியல் பைலோ என்று பார்த்தார். சுகந்திக்கு, அவர் தன் காதல் கடிதங்களைப் பார்த்தது கூடப் பெரிதாகத் தெரியவில்லை. கையில் உள்ள பைலை மறைக்க வேண்டும். இல்லையானால், 'கொடுக்காமலா வைத்தாய் என்று கெடுத்துவிடுவார்."நீங்க கொடுத்தீங்களா என்பது முக்கியமல்ல.