பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தராக 作 “ஸாரி மேடம் வழக்கமாய்த் தினமும் நீ தருகிற ரெண்டு ரூபாயைக் கூட நான் கேட்காததிலிருந்து ஒன்னோட பட்ஜெட் நிலைமையை நான் எப்படிப் புரிஞ்சிட்டிருக்கேன்னு உனக்கே தெரியும். நாளைக்குத்தான் சம்பளம்.” "விருந்தாளிகள் இன்னைக்கே வாராங்களே?” "எப்படியாவது சமாளிம்மா” செந்தாமரை, ஏதோ கோபமாகச் சொல்லப் போனவள். அப்போது காருக்குள் அடைபட்டுக் கிடந்த டெப்டி டைரக்டர் வெளியேவந்துநின்று, நேரமாவதைச்சொல்லாமல் சொல்வதுபோல் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இங்கிதம் தெரிந்த செந்தாமரை, அது தெரியாத விஸ்வநாதனை விலாவில் இடித்தபடியே காருக்குள் கூட்டிப் போனாள். அந்தக் கடை முன்னால், பிரேக் போட்டு, அந்தப் பகட்டு கார் நின்றது. காரில் இருந்து இறங்கிய செந்தாமரையை அந்தக் கடையை மொய்த்த பெண்கள் வியந்து பார்த்தார்கள். இவ்வளவு பெரிய காரில் வந்தாலும், எவ்வளவு அடக்கத்தோடு இருக்கிறாள்! பெண்கள் இரண்டாகப் பிரிந்து, செந்தாமரைக்கு வழி போட்டுக் கொடுத்தார்கள். ஆனால் கடைக்காரர் அககாய சூரர். மஞ்சள் மசாலா மளிகைக் கடைக்கு முன்னாலேயே ஒரு மேஜைமேல் வியாபித்த பிளாஸ்டிக் விரிப்புமேல் விதவிதமான காய்கறிகளை அடுக்கி வைத்திருந்தார். ஒரு பக்கம் ஐஸ் மோர். இன்னொரு பக்கம் மூன்று அரிசி மூட்டைகள், கோணி வாயில் வெள்ளைப் பற்களைக் காட்டிக் கொண்டிருந்தன. செந்தாமரை கடனுக்குப்பீடிகையாய்,"என்ன அண்ணாச்சி. ஊர்ல மழைபெய்துதாம்மா? எப்ப்ோ போறlங்க என்று கேட்கலாமா என்று நினைத்தாள். சீச்சீ. இந்தப் பசப்பு வார்த்தையைப் பேசுகிற வாய் பட்டினி கிடக்கலாம். அது சரி. நான் பட்டினி கிடக்கலாம். விருந்தாளிகளையுமா.