பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

炒 க. சமுத்திரம் சகலகலா மண்டி வியாபாரியான கடைக்காரர், செந்தாமரையைக் கவிழ்கண் போட்டுப்பார்த்தார். அவளைப் பார்த்த கண்ணோடு, அங்குள்ள அத்தனை பெண்களையும் பார்த்தார். இச்சையாக அல்ல - எது எது கடன் பாக்கி என்ற ஆய்வோடு. செந்தாமரை உதட்டைக் கடிப்பதிலிருந்தும், கால் பெருவிரலால் தரையில் கோடு போடுவதிலிருந்தும் அவர் புரிந்து கொண்டார். கடைக்காரர், ஒரு பாட்டி மீது பாய்ந்தார். "என்ன ஆயா நீ. கொகருன்னு சொல்லிட்டு அவ்வளவு கறிவேப்பிலையும் எடுத்தா எப்படி? மாட்டுக்குத் தீவனமா போடப் போறே? ஏய் செங்கணி! ஒங்க வீட்டுக்காரம்மா எப்போதான் அந்தப் பாக்கியைத் தரப் போறாங்களாம்? “வந்து. சாயங்கலாமாய்த் தருவாங்களாம்.” "நீயும் சாயங்காலமாவே வா. போன மாசத்துப் பேரடு கணக்குத் தீர்க்கும் முன்னால, ஒரு அரிசிகூட போடமாட்டேன். பேரெடு கணக்கில் முந்நூறு ரூபாய் தாண்டுற எந்த அம்மாவுக்கும் அதுக்குமேல கடன் கிடையாது” கடையைச் சுற்றி நின்ற அத்தனை பெண்களும், தத்தம் கரங்களில் இருந்த கைக்கு அடக்கமான நோட்டு புத்தகங்களைப் பயபக்தியோடு பிரித்துப் பார்த்தார்கள். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாளிலும் அவர்கள் வாங்கிய பொருட்களும், அவற்றின் விலையும் எழுதப்பட்டுக் கடைக்காரரால் கையெழுத்திடப் பட்டிருந்தன. கடைக்காரர் கொடுத்திருக்கும் ஒருவிதமான பாஸ் முந்நூறு ரூபாய்க்குமேல் போன பெண்கள் முகம் கழித்தும், அதற்கு உள்ளேயே இருந்த பெண்கள், முந்தைய பெண்களின் முகக் கலவரத்தை ரசித்தபடியும் நின்றபோது, ஒரு மாமி வந்தாள். "என்ன கடைக்காரரே, செளக்கியமா?”