பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தராக 113 "ஒங்க கடன் பாக்கி நானுாறு ரூபாயாய் நிற்கும்போது நான் எப்படி செளக்கியமாய் இருக்க முடியும்மா? நான் ஏதோ தமாஷ் பேசுறமாதிரி சிரிச்சு மழுப்பாதீங்கம்மா! ஸ்கூட்டர்ல போகத் தெரியுது. சினிமாவுக்குப் போகமுடியுது. ருசிருசியாய்ச் சாப்பிடத் தெரியுது. கடைப் பாக்கியை மட்டும் தரத் தெரியலை.” "ஏன் இப்படி தெரியாதது மாதிரி பேசறேள்? ஒங்க காசைக் காக்கா கால்லே கட்டி அனுப்புவேனாக்கும்?" "அதைச் செய்யுங்க முதல்ல. வியாபாரத்துல தெரிஞ்ச வங்கன்னு யாரையும் பார்க்கப்படாதும்மா. அப்படிப் பார்த்தால், நான்தான் தெரியாமப் போயிடுவேன். அதோ அந்த அம்மாக்கூட ஒங்களைவிட எனக்கு அதிகமாய்த தெரிஞ்சவங்க தான். எங்க ஊர்ப்பக்கம் வேற. அவங்க கேட்டால் கூடக் கடன் கொடுக்கப் போறதில்ல. உங்களுக்கோ அவங்களுக்கோ கொடுக்கப்டாதுன்னு அர்த்தமில்லே. நான் அவ்வளவு தூரம் நொடிச்சிட்டேன்னு அர்த்தம். ஏய்மூதேவி தக்காளியை ஏன் அப்படிப்பிகக்கிறே?உடைச்சிட்டால் ஒப்பனாகாசுதருவான்?செந்தாமரையம்மா, ஒங்களுககு எந்தக்காய் எத்தனை கிலோ வேணும்மா? சில்லறையாக் கொடுங்க. அம்பது ரூபாய் கொடுத்துச் சில்லறை கேட்டு. அவஸ்தைப் படுத்தாதீங்க." பாம்புபோல் நெளிந்தபுடலங்காய்களையும்,பல் விதைகளைக் காட்டிய தார் பூசணியையும், கண்டெலிபோல் தோன்றிய சேப்பன் கிழங்குகளையும், தன் முகம் போல் காட்டிய உருளைக் கிழங்கு களையும் தொலைநோக்காய்ப்பார்த்தசெந்தாமரை, கடைக்காரரைப் பார்த்துவிட்டு, ஏதோ ஒரு வைராக்கியத்தோடு, நடக்கப் போனாள். கடைக்காரர், அவளைச் சாய்த்துப் பார்ததபோது, 'அரிசி வாங்குறதுக்கு துக்குப்பை எடுத்துட்டுவரேன்” என்று சொன்னபடி நடந்தாள். செந்தாமரை வீட்டுக்குப் போய்த்தான் என்ன ஆகப்போகிறது என்பதுபோல், மெள்ள நடந்தாள். பிறகு, இவரோட