பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114. க. சமுத்திரம் பவிக, விருகம்பாக்கம் அண்ணனுக்கும் தெரியட்டும் என்று அதைத் தெரியப்படுத்தப் போகிறவள் போல் வேகமாய் நடந்தாள். ஊரில் அம்மா, கழுதை வயகக்கு வந்த பிறகும் தனக்கு உணவூட்டி விட்டது மனதிலே நினைவுகளாய்,வாயிலே பெருமூச்சாய், கண்ணிலே நீராய் உருமாறின. பழைய இனியவை, புதிய கசப்போடு வந்தன. ஒன்றரை வருடத்திற்கு முன்புதான், அப்பா வில்லாதி வில்லனாக ஆகாமல் போன இந்த விஸ்வநாதனிடம், அவளைத் தள்ளினார். மூன்று பெண் மக்களை வியாபாரிகளுக்குத் கொடுத்த தந்தை, ஒரு சேஞ்கக்காக இவளை பட்டதாரியும், அரசாங்க ஆசாமியுமான இந்த விஸ்வநாதனிடம் ஒப்படைத்தார். பிளஸ்டு’ செந்தாமரைகூட தனது அக்காக்களுக்காக அனுதாபமும், தனக்காகப் பெருமிதமும் கொண்டாள். அப்புறந்தான் தெரிந்தது - அப்பா சேஞ்சுக்காகப் பிடித்த மாப்பிள்ளை மாதக் கடைசியில் சேஞ்சே இல்லாதவர் என்று. வியாபாரி-மச்சான்களின் ஒருநாள் சம்பாதனை, இவரின் ஒரு மாதச் சம்பளம். செந்தாமரை, வீட்டுக் கதவை திறந்து, அதைக் காலாலேயே உதைத்தாள். ஒரு முக்காலியில் இருந்த டெலிபோனைத் துாக்கி எறியப் போனாள். நீங்க கெட்ட கேட்டுக்கு. ஒங்களுக்கு டெலிபோன் ஒரு கேடா? என்று அவனிடமே கேட்பதற்காக டயலைச் சுற்றினாள். 'ஹலோ. ஆபீஸ் சூப்ரின்டென்ட்,மிஸ்டர்விஸ்வநாதனோட பேசனும்” "அவருவேறடெலிபோன்லபேசிட்டு இருக்கார்லைன்லேயே இருங்க” செந்தாமரை டெலிபோன் குமிழைக் காதில் பட்டுப் பட்டென்று அடித்துக் கோபத்தைக் கொட்டியபோது, விஸ்வநாதன் குரல் தெளிவாகக் கேட்டது.