பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தராக 炒5 'ராமச்சந்திரனோட ஆறு லட்சம் ரூபாய் கொட்டேஷடன் லோவஸ்ட்தான். ஆனாலும், கொடுக்கணுமுன்னு கட்டாயம் இல்லையே? போன பைனான்ஷியல் வருஷத்திலேயும் இதே மாதிரி லோவஸ்ட் ரேட் செய்து அப்புறம் பாதி பீரியட்ல. விலைவாசி கூடிட்டு என்கிற சாக்கில அதிகமாய் மூன்று லட்சம் கேட்ட கம்பெனி. அது தேவையில்லை. கோபி கம்பெனி ஆறு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் கேட்டாலும் குவாலிட்டி கம்பெனி. சொன்ன சொல்லில் நிற்கிற நிறுவனம். முப்பதாயிரம் அதிகமாய் இருக்கட்டுமே. ஆப்டர் ஆல் முப்பதாயிரம் ரூபாய். பட்ஜெட்ல சரிக் கட்டிக்கலாம்.” செந்தாமரை மனம் குமுறியது. அவன் பேகவது அவள் காதுக்கு நன்றாகவே கேட்டது. இவளும் தனக்குள் பேசிக் கொண்டாள். 'ஆப்டர் ஆல் ரெண்டு கிலோ அரிசி வாங்க வக்கில்ல. ஒரு வாழைக்காய் கூட வாங்குறதுக்குத் துப்பில்ல. ஆப்டர் ஆல் முப்பதாயிரம் ரூபாய்னு பேசறதைப் பாரு. வீட்டு பட்ஜெட்டை சரிகட்டாத மனிதருக்கு, கவர்மெண்ட் பட்ஜெட் எப்படி வரும? இதனாலதான் நாடு உருப்படல, விஸ்வநாதன் குரல் அழுத்தமானது. அவள் தன்னிடம்தான் பேசுகிறாரோ என்பதுபோல் செந்தாமரை உற்றுக் கேட்டாள். அவன், இன்னும் அதே போனைத்தான் கட்டியழுதான். "ஐ ஆம் ஸாரி வார். நான் பிழைக்கத் தெரியாதவனாவே இருந்துட்டு போறேன். ஸார். அடுத்தவர் காசு எனக்குத் தேவை இல்லை ஸார் என் ஒய்ப் நச்சரிப்பு இல்ல ஸார். என்னோட நேர்மையைத் தன்னோட தாலி பாக்கியமாய் நினைக்கிறவள். யாரோடபட்டுச்சேலைக்கும் பகட்டுக்காருக்கும் பணம் கேட்டுத்தாலி யைக் கழட்டி எறிகிறவள் இல்ல ஸார். ஐ ஆம் ஸாரி வார். உங்க வீட்டு இன்சிடென்டைச் சொல்லல வார். குடும்பத்தையும் கவனிக்கணுமுன்னு நீங்க சொன்னதால. இப்படிச் சொன்னேன். 9