பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

焰 க. சமுத்திரம் படபடத்துப் பேசிய விஸ்வநாதன், எதிர்முனை பதிலை எதிர்பார்த்தபோது, அதே முனையில் டங்கென்று ஒரு சத்தம். "அடடே.. அளவிஸ்டெண்ட் டைரக்டர் போனை டப்புன்னு வச்சுட்டாரே. இந்த லைன்லே யாருய்யா இருக்குது? ஹலோ லாரி. பார் கீப் யூ வெயிட்டிங், யார் பேசுறது?’ என்றான் விஸ்வநாதன். செந்தாமரையால், பேச முடியவில்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒன்று காற்றா புனலா - கதகதப்பான சூடா, ஏதோ ஒன்று உட்சென்று அவளை உறுதிப்படுத்துவது போல் இருந்தது. அத்தனை கோபதாபங்களும், ஆக்கபூர்வமாய், நேர்மை வேள்விக்கு எருக்களாயின.விஸ்வநாதன் உதவியாளரிடம் பேசுவது கேட்டது. “என்னப்பா, இது ராங் நம்பரா?” செந்தாமரை உரக்கவும், உற்சாகமாகவும் கூவினாள் "ரைட் நம்பர், ரைட் லேடி என்னங்க. ஒங்களத்தான்.” - குமுதம், 25.888 ©