பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றுக்குள் இரண்டு அலுவலகமே அல்லோல கல்லோலப் பட்டது. கொடியவன் என்றுகொடிகட்டிப்பறந்த,பழையசேல்ஸ்மானேஜர்கழிவதாலும், புதிய சேல்ஸ் மேனேஜர் புகுவதாலும் அலுவலகத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். பழையவரைவிட எவரும், மோசமான வராக இருக்க முடியாது என்ற அனுமானமே, புதியவருக்கு, ஒரு தகுதியாக வாய்த்தது. மானேஜிங் டைரக்டர், “திஸ் இஸ் யுவர் பிராஞ்ச்.ஹரி ஈஸ்.ஹெட் கிளார்க்சோணாசலம்..” என்று சொல்லி முடித்து, புதியவரை அங்கே புகுத்திவிட்ட திருப்தியில் போய் விட்டார். செக்ஷன் ஆட்கள் அனைவருமே எழுந்து நின்றார்கள்; டைப்பிஸ்ட்காரி கொண்டையை சரிசெய்து கொண்டாள். சேல்ஸ் - அசிஸ்டண்ட் சிங்காரம், சட்டைப் பித்தானைப் போட்டுக் கொண்டான். "மாடர்னாக இருப்பதாய் காட்டிக்கொள்ள விரும்பிய பெண்கள், பெளவியமாய் இருப்பதாய் நினைத்துக் கொண்ட பெண்கள், கிளாட் டு மீட் யூ ஸார் என்ற வார்த்தை களை அறிமுகப்படுத்தப்பட்டவுடனேயே சொல்லியாக வேண்டும் என்பதற்காக, அவற்றை மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த ஆண்கள் - இப்படி அலுவலகம், தீபாவளியை கொண்டாடுவதுபோல், புதுமையாகத் தோன்றியது. சேல்ஸ் மானேஜர் சதாசிவத்திற்கு இருபத்தெட்டு வயதிருக்கலாம். டுவிட்பேண்டும், சிலாக்கும், உடம்பில் ஒட்டியும் ஒட்டாமலும் மின்விசிறியில் லேசாக ஆடின. கூர்மையான பார்வையும், அறிமுகப் படுத்தப்படுவோரின் கண்களை, அவன்,