பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே பகலுக்குள் j45 "காலிலே ஒரே சேறு. அந்தக் குட்டையிலே லேசா காலைக் கழுவிட்டு.” "லேசாய் கழுவ வேண்டாம். பலமாவே குளிச்சிட்டு வா. நான் டாக்ளியியிலே போயிடறேன்." கார்க் கதவைத் திறக்கப்போன பெருமாள், அதை விட்டுவிட்டு கீரைகோபம் கோபமாக இழுத்தார். கார் பறந்தது. ஆபீஸர், அவரது முதுகைப் பார்த்தபடியே ஒரு கேள்வி கேட்டார். "ஏன்யா. யூனிபார்ம் போடலை?” "அதுங்களா அய்யா. நேற்று நைட்ல. உங்களை இங்க விட்டுட்டு ஆபீஸ் போனேனா. ஒரே மழையா? சைக்கிள்ல. வீட்டுக்குப் போறப்போ வெள்ளை யூனிபாரம் தெப்பமா நனைஞ்சிட்டு. இன்னொரு யூனியாரமும் முந்தா நாள் இதே மாதிரி ஆயிட்டு. அதோட இந்த உல்லன் பேண்டும் கோட்டும், குளிர தவிர்க்குது.” "அப்படியா? நீ யூனியாரம் போடாம இருக்கிறதுக்கு ஏற்பாடு செய்யறேன்." “ரொம்ப நன்றிங்க அய்யா.” "அதாவது. உன்ன வேலையில் இருந்தும் யூனிபாரத்தில் இருந்தும் கழட்டி விடுறேன்.” "அய்யோ. அய்யா. நான் புள்ளகுட்டிகாரன். தெரிஞ்சு தெரியாம பேசியிருந்தால் மன்னிச்சிடுங்க..” நீண்ட மெளனம். டிரைவர் பெருமாள் கருமமே காரானார். அதிகாரி, தன்னைத்தானே, அதிசயத்து பார்த்துக் கொண்டார். அப்போது, அந்தக் கார், சாலையில் குறுக்கசால் பாய்ச்கம் ஒரு கடையை தாண்டிப் போனது. அரை கிலோ மீட்டர் போனதும்,