பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14.4. க. சமுத்திரம் "நடக்கேன். நடக்கேன். மதுரையில் டெப்டி டைரக்டர் ராமபத்ரன் இருக்காரே, அவரோட வீடு. இப்படி இடுக்குல இல்ல. பெரிய மைதானம் முன்னால இருக்கு. நீ அங்கேயே போய் வேலை பார்க்கலாம். மாத்திடுறேன்.” பெருமாள் அலறியடித்து ஓடினார். கார் இருக்கையில் துள்ளிக் குதித்து ஏறினார். அகலமான பாதையில் நின்ற அந்தக் காரை ஒடித்து வளைத்து, ரிவர்ஸில் எடுத்தார். அந்த இடுக்குப் பாதைக்குள் கார் ஒப்பாரி போட்டுக்கொண்டே போனது. அதென்ன. என்ன தடுக்குது? பெருமாள், கார் இருக்கையிலிருந்து இறங்கினார். கணுக்கால் அளவு சேறு இருக்குமென்று நடந்தால், அது முழங்கால்களைத் தொட்டுவிட்டது. கீழே ஒடிந்து கிடந்த கருவேல மரக் கிளையை கையில் முள்குத்த, தம் பிடித்துத் துரக்கி, ஒரு ஓரத்தில் போட்டார். டயர் பஞ்சர் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, ஆங்காங்கே கண் சிமிட்டிய ஒற்றைக்கண் முட்களையும், ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வீசினார். ஆபீஸ்ரோ,"குயிக்மேன்.குயிக்மேன்." என்றார். பெருமாள் மீண்டும் காரைப் பார்த்து ஓடி, இருக்கையில் எகிறிக் குதித்துரிவர்ஸில் வந்தார். சக்கரங்கள் சேறுக்குள் மாட்டிக்கொண்டு, ஒரே இடத்திலேயே கற்றி வந்தன. பெருமாள் கீழே இறங்கி, வண்டியைத் தள்ளி, சக்கரங்களை நகர்த்தி ஆபீஸருக்கு கதவைத் திறந்து வைத்தபடியே நின்றார். அந்த நேரத்தில் மாடிப்படி வழியாக வந்த போதைக்கார மகனை திட்டிக்கொண்டே இருந்த ஆபீஸர் திட்டுவதை முடிப்பதுவரைக்கும்,பெருமாள் பேச்சற்றுப்போனவராய் பத்து நிமிடம் கார்க் கதவை திறந்து வைத்தபடியே நின்றார். எப்படியோ, அந்தக் கார், அரைக்கிலோ மீட்டர் ஓடி, ஒரு குட்டைப் பக்கம் வந்தது. பெருமாளுக்கு காலில் சேறு அப்பியதால் ஆக்ஸிலேட்டரை அழுத்த முடியவில்லை.பிரேக்கும் பிடிபடவில்லை. வண்டியை நிறுத்தினார். பின்னால் தினசரி பத்திரிகை ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த ஆபீஸர், மேல் புருவங்களை நிமிர்த்தியபோது, பெருமாள் விளக்கமளித்தார்.